சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலனுடன் சேர்ந்து கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே கொழுந்தனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த அண்ணியை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு அருகே கொடைக்கான்வலசை கிராமத்தை சேர்ந்த முத்து மகன் ராஜேந்திரன் 29. இவரது மனைவி பூமாதேவி 28. திருமணமாகி குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாக உள்ளார். ராஜேந்திரன் அண்ணன் செல்வம் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி சத்யா

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே கொழுந்தனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த அண்ணியை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு அருகே கொடைக்கான்வலசை கிராமத்தை சேர்ந்த முத்து மகன் ராஜேந்திரன் 29. இவரது மனைவி பூமாதேவி 28. திருமணமாகி குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாக உள்ளார். ராஜேந்திரன் அண்ணன் செல்வம் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி சத்யா 35. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் ராஜேந்திரன் சத்யாவிற்கு உதவி செய்து வந்தார். அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஊரார் கண்டித்ததால் சத்யா ஏர்வாடியை சேர்ந்த வேறு சிலருடன் பழகினார். இதை ராஜேந்திரன் கண்டித்தார். இதனால் சத்யாவுக்கும், ராஜேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரத்தில் ஒருவரிடம் பணம் வாங்க வேண்டும் என ராஜேந்திரனை சத்யா அழைத்தார். ராஜேந்திரன் டூவீலரில் சத்யாவை அழைத்து வந்தார். இரவு 9:30 மணிக்கு ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்றனர். அப்போது டூவீலரை நிறுத்த சொல்லி இறங்கிய சத்யா அலைபேசியில் சற்று தள்ளி நின்று பேசினார்.அங்கு இருட்டில் மறைந்திருந்த இருவர் ராஜேந்திரனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர்.

கேணிக்கரை எஸ்.ஐ., ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். பணம் கேட்டும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும் கள்ளக்காதலனை வரவழைத்து ராஜேந்திரனை சத்யா கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.போலீசார் சத்யாவை கைது செய்தனர். கள்ளக்காதலன், அவருடன் வந்தவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X