பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானலில் படகு கட்டணம் உயர்வு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கொடைக்கானல்:கொடைக்கானலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் இயக்கப்படும் படகு குழாமில் திடீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு படகு சவாரிக்கு அனுமதியளிக்கப்பட்டது.துவக்கத்தில் 2 பேர் பயணம் செய்யும் துடுப்பு படகிற்கு கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ. 150 ஆக வசூலிக்கப்படுகிறது.

கொடைக்கானல்:கொடைக்கானலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் இயக்கப்படும் படகு குழாமில் திடீர் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு படகு சவாரிக்கு அனுமதியளிக்கப்பட்டது.துவக்கத்தில் 2 பேர் பயணம் செய்யும் துடுப்பு படகிற்கு கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ. 150 ஆக வசூலிக்கப்படுகிறது. வார இறுதி நாளில் ரூ. 200 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபோல் நான்கு சீட், 6 சீட், சிக்கார துடுப்பு படகு போன்றவற்றுக்கும் திடீரென கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் எக்ஸ்பிரஸ் கட்டணம், வரிசையில் நிற்காமல் துரிதமாக படகில் செல்வற்கும் கட்டணம் ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது.முன்னறிவிப்பின்றி சில தினங்களாக இந் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ந்துள்ளனர்.படகு குழாம் மேலாளர் அன்பரசு கூறுகையில், ''கட்டண உயர்வு அலுவலகம் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி எனக்கு தெரியாது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X