சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமானவர் கொலையா கண்மாயில் தேடும் போலீஸ்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
தேவகோட்டை:பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பூதங்குடியை சேர்ந்தவர் வேலுச்சாமி 45. பத்து ஆண்டுகளுக்கு முன் வேலுச்சாமியை திடீரென காணவில்லை.குடும்பத்தினர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில்

தேவகோட்டை:பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பூதங்குடியை சேர்ந்தவர் வேலுச்சாமி 45. பத்து ஆண்டுகளுக்கு முன் வேலுச்சாமியை திடீரென காணவில்லை.குடும்பத்தினர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கொலை தொடர்பாக குமுலுார் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரித்தபோது சில ஆண்டுகளுக்கு முன் தேவகோட்டையில் ஒருவரை கொலை செய்ததாகவும் புதுக்கோட்டை மாவட்டம் வடவாத்தி கண்மாயில் புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.இதையடுத்து நேற்று காளிமுத்துவுடன் போலீசார் சென்று கண்மாயில் பல இடங்களில் குழி தோண்டி தேடியும் உடல் கிடைக்கவில்லை. இன்றும் தேடுதல் தொடர உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X