சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல்ராமநாதபுரத்தில் 2 பேர் கைது

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:திருப்பூர் அரிசிஆலை அதிபர் மகன் கடத்தல் வழக்கில் தொடர்புள்ள நபர் மற்றும் அவருக்கு உதவியவரை ராமநாதபுரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரிசிஆலை நடத்தி வரும் ஈஸ்வரமூர்த்தி மகன் சிவபிரதீப் 22, அவரது கார் டிரைவரை ஆக.,21 ல் ஒரு கும்பல் கடத்தி ரூ.3கோடி பணம் கேட்டு மிரட்டனர்இதுதொடர்பாக தனிப்படை போலீசார் 4பேரை கைதுசெய்து

ராமநாதபுரம்:திருப்பூர் அரிசிஆலை அதிபர் மகன் கடத்தல் வழக்கில் தொடர்புள்ள நபர் மற்றும் அவருக்கு உதவியவரை ராமநாதபுரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரிசிஆலை நடத்தி வரும் ஈஸ்வரமூர்த்தி மகன் சிவபிரதீப் 22, அவரது கார் டிரைவரை ஆக.,21 ல் ஒரு கும்பல் கடத்தி ரூ.3கோடி பணம் கேட்டு மிரட்டனர்இதுதொடர்பாக தனிப்படை போலீசார் 4பேரை கைதுசெய்து ரூ.1கோடியே 89 லட்சத்தை பறிமுதல் செய்து மேலும் 3பேரை தேடி வந்தனர்.

இதில் மதுரையை சேர்ந்த பாலன் 35, ராமநாதபுரம் அருகே புதுமடத்தில் பதுங்கியது அவரது அலைபேசி டவர் மூலம் திருப்பூர் போலீசாருக்கு தெரியவந்தது. ராமநாதபுரம் போலீசார் உதவியுடன் நேற்று பாலன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த புதுமடம் கார்த்திக் 34, ஆகியோரை கைது செய்தனர்.இவர்களிடம் சில லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து விசாரணைக்காக திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X