உடைஞ்சு ஆறு மாசமாச்சு; சொல்லி மூணு மாசமாச்சு! குடிநீர் வீணாவதை அதிகாரிகள் கண்டுக்கல!

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம், : அன்னுார், அவிநாசி கூட்டு குடிநீர் திட்டத்தின், பிரதான குழாய் உடைந்து ஆறுமாதம் ஆகிறது. இதுகுறித்து, பெள்ளேபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், இரவு பகலாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.அன்னுார், அவிநாசி, சூலுார் ஆகிய

மேட்டுப்பாளையம், : அன்னுார், அவிநாசி கூட்டு குடிநீர் திட்டத்தின், பிரதான குழாய் உடைந்து ஆறுமாதம் ஆகிறது. இதுகுறித்து, பெள்ளேபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது.

ஆனால், கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், இரவு பகலாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.அன்னுார், அவிநாசி, சூலுார் ஆகிய ஒன்றியங்களுக்கு, கூட்டு குடிநீர் திட்டத்தில், சிறுமுகை அடுத்த வேடர்காலனி அருகே, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.வேடர்காலனி அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், தண்ணீரை சுத்தம் செய்து, குழாய் வாயிலாக குடிநீர் அனுப்பப்படுகிறது. சிறுமுகை-அன்னுார் சாலையில், வெள்ளிகுப்பம்பாளையம் அருகே, இத்திட்டத்தின் நீரேற்று நிலையம் உள்ளது. தொட்டிகளில் தேக்கி வைக்கப்படும் நீர், மின்மோட்டார் வாயிலாக, பம்பிங் செய்யப்படுகிறது. நீரேற்று நிலையத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில், அன்னுார் சாலையில் மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, இரவு பகலாக, பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.அலட்சியம் பெள்ளேபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர், கிராம இணைப்பு உடைந்திருக்கலாம் எனக் கருதி, பொக்லைன் வாயிலாக தோண்டி பார்த்தனர். அப்போது, அன்னுார்-அவிநாசி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு என, தெரியவந்தது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர், திட்ட நீரேற்று நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் தெரிவித்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை உடைப்பு சரி செய்யப்படவில்லை.அன்னுார், அவிநாசி, சூலுார் ஒன்றியங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குழாய் உடைப்பை சரி செய்யாமல், மெத்தனம் காட்டி வருவது, வேதனையை அளிக்கிறது என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X