மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி

Added : ஆக 26, 2021
Share
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே, செல்வபுரத்தில், விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்க, ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் 'அட்மா' திட்டம் சார்பில் நடந்த முகாமுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா, தலைமை வகித்தார்.முகாமில், தமிழ்நாடு வேளாண் பல்கலை உதவி பேராசிரியர் நடராஜன், மண்புழு உரம் தயாரித்தல் குறித்த

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே, செல்வபுரத்தில், விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்க, ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் 'அட்மா' திட்டம் சார்பில் நடந்த முகாமுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா, தலைமை வகித்தார்.

முகாமில், தமிழ்நாடு வேளாண் பல்கலை உதவி பேராசிரியர் நடராஜன், மண்புழு உரம் தயாரித்தல் குறித்த தொழில்நுட்ப நுணுக்கங்களை எடுத்துக் கூறினார்.மேலும், ஆப்பிரிக்கன் மற்றும் ஐரோப்பியன் வகை மண்புழுக்கள், மண்புழுவால் பயிர்களுக்கு தேவையான சத்துக்கள் எவ்வாறு கிடைக்கின்றன, மண்புழு உரம் தொட்டி அமைத்தல், மண்புழு உரத்தின் முக்கியத்துவம், அங்கக வேளாண்மை, பசுந்தாள் உரம் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கினார்.

பயிற்சியில், துணை வேளாண்மை அலுவலர் விஜயகோபால், வேளாண்மை உதவி அலுவலர் ரமேஷ், 'அட்மா' திட்ட அலுவலர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X