தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக் கொள்ள...ஆள் இல்லை! டோக்கன் தாமதத்தால் சொதப்பல்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெ.நா.பாளையம் : தட்டுப்பாடு காரணமாக, தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அலைமோதும் நிலையில், அரசுத் துறையினரின் சொதப்பலால், பெ.நா.பாளையம் அருகே, 24 வீரபாண்டியில், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது.கொரோனா பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை, தொடர்ந்து எடுத்து வருகின்றன.கோவை மாவட்டத்தில், தினந்தோறும் காலை, 8:00 மணிக்கு, மாவட்ட நிர்வாகத்தின்
தடுப்பூசி போட்டுக் கொள்ள...ஆள் இல்லை! டோக்கன் தாமதத்தால் சொதப்பல்

பெ.நா.பாளையம் : தட்டுப்பாடு காரணமாக, தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அலைமோதும் நிலையில், அரசுத் துறையினரின் சொதப்பலால், பெ.நா.பாளையம் அருகே, 24 வீரபாண்டியில், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது.

கொரோனா பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை, தொடர்ந்து எடுத்து வருகின்றன.கோவை மாவட்டத்தில், தினந்தோறும் காலை, 8:00 மணிக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தடுப்பூசி போடப்படும் மையங்கள் குறித்தும், எண்ணிக்கை குறித்தும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக தகவல் வெளியிடப்படுகிறது.அந்த குறிப்பிட்ட மையங்களில், காலை, 10:00 மணிக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கி, மதியம் ஒரு மணிக்குள் நிறைவடைகிறது.இந்த வழிமுறையால், பொதுமக்கள் எவ்வித சச்சரவும் இன்றி, அமைதியாக வரிசையில் நின்று, தடுப்பூசி போடும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.50 ஆயிரம்கோவை மாவட்டத்தில் நேற்று மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 34 முகாம்களில், 10,200 டோஸ்கள்; கிராமப்புறங்களில் நடந்த 53 முகாம்களில், 10,650 டோஸ்கள்; சிறப்பு முகாம்கள் வாயிலாக, 29,620 டோஸ்கள் என, மாவட்டம் முழுவதும் மொத்தம், 50, 470 தடுப்பூசிகள் போடப்பட்டன.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 24 வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூ.கவுண்டம்பாளையம், சோமையம்பாளையம், ஆனைகட்டி, 4 வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா, 150 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டது.இதில், 24 வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று பிறப்கல் 3:00 மணிக்கு, 20 தடுப்பூசிகள் மீதம் இருந்தன. தடுப்பூசி போட ஆட்கள் யாரும் வராததால், இதுகுறித்து சமூக வலைதளங்களில் உடனடியாக செய்திகள் பரவின. இதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் தடுப்பூசிகளை போட்டு சென்றனர்.வழக்கமாக, தடுப்பூசி எங்கு போடுகிறார்கள் என, மக்கள் தேடித் தேடி அலைவர். ஆனால், தற்போது ஒரு சில மையங்களில் உரிய நேரத்தில், மக்களுக்கு தகவல் தெரிவிக்காததால், தடுப்பூசி டோஸ்கள் எஞ்சும் நிலை ஏற்படுகிறது.டோக்கன் தாமதம்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார ஆய்வாளர் வடிவேல் கூறியதாவது:வழக்கமாக தினசரி காலை, 9:00மணிக்கு டோக்கன் வழங்கப்படும். தொடர்ந்து, 10:00 மணி முதல் தடுப்பூசி போடும் பணி துவங்கிவிடும்.ஆனால், நேற்று ஊரகப் பகுதிகளில் மதியம் 12:00 மணிக்குதான் டோக்கன் வழங்கப்பட்டது.தடுப்பூசி போடும் பணி, 1:30 மணிக்கு தொடங்கியது. இதனால் பல மையங்களில் இன்று தடுப்பூசி போட மாட்டார்களோ என்று எண்ணி, பெரும்பாலானவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.இருப்பினும், தடுப்பூசி மீதம் இருப்பதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக மையத்திற்கு வந்து, செலுத்திக் கொண்டனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஆக-202116:52:40 IST Report Abuse
அப்புசாமி சும்மாவா? கோயமுத்தூர் ஸ்மார்ட் சிட்டி ஆச்சே... இப்பிடித்தான் சொதப்பணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X