பொது செய்தி

தமிழ்நாடு

இடியும் நிலையில் தொகுப்பு வீடுகள் அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
அன்னுார் : தொகுப்பு வீடு இடிந்து விழுந்து, தொழிலாளி பலியான காலனியில், மற்ற வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அன்னுார் அருகே, பிள்ளையப்பம்பாளையம் காலனியில், 110 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு 30 தொகுப்பு வீடுகள், 32 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. கடந்த வாரம், தொடர்ந்து நான்கு நாட்கள், மழை பெய்தது.கடந்த 23ம் தேதி, மழையால் சேதமடைந்த தொகுப்பு வீட்டை, பழுது பார்க்கும்

அன்னுார் : தொகுப்பு வீடு இடிந்து விழுந்து, தொழிலாளி பலியான காலனியில், மற்ற வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அன்னுார் அருகே, பிள்ளையப்பம்பாளையம் காலனியில், 110 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு 30 தொகுப்பு வீடுகள், 32 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. கடந்த வாரம், தொடர்ந்து நான்கு நாட்கள், மழை பெய்தது.கடந்த 23ம் தேதி, மழையால் சேதமடைந்த தொகுப்பு வீட்டை, பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி பண்ணாரி, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இறந்தார். அந்தக் காலனியில் உள்ள மற்ற தொகுப்பு வீடுகளும், எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக, அக்காலனி மக்கள், வருவாய் துறையிலும், போலீசிலும் புகார் செய்தனர்.

இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் சிவகாமி, ஊராட்சித் தலைவர் லட்சுமண மூர்த்தி, செயலாளர் சாமிநாதன் உள்ளிட்டோர், தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தனர். இதில், 20 வீடுகளில், மேற்கூரையில், சிமென்ட் காரைகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரிந்தன.ஊராட்சி நிர்வாகத்தினர், 'அபாயமான நிலையில் உள்ள வீடுகளில் யாரும் தங்க வேண்டாம். உறவினர் வீடுகளில் தங்குங்கள். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து, சிறப்பு திட்டத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X