அத்துமீறல்... அலட்சியம்... ஆபத்து

Added : ஆக 26, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி பிரதான சாலையோரம் மற்றும் மின் டிரான்ஸ்பார்மர் போன்ற இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றாமல், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.அவிநாசி -- சேவூர் ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, தனியார் கட்டடங்கள் சிலவற்றில் விளம்பர பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில்உள்ள மின் டிரான்ஸ்பார்மரை சுற்றி, சில

அவிநாசி : அவிநாசி பிரதான சாலையோரம் மற்றும் மின் டிரான்ஸ்பார்மர் போன்ற இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றாமல், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

அவிநாசி -- சேவூர் ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, தனியார் கட்டடங்கள் சிலவற்றில் விளம்பர பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில்உள்ள மின் டிரான்ஸ்பார்மரை சுற்றி, சில நிறுவனங்கள் விளம்பர பதாகைகள் வைத்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.விளம்பர பலகை 'முளைப்பது' ஏன்?இத்தகைய விளம்பர பலகைகளை வைக்க, போலீசாரின் அனுமதி நிச்சயம் தேவை. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் சார்பில், ஆங்காங்கே 'பேரிகார்டு' மற்றும் சாலை விதிமுறை தொடர்பான விழிப்புணர்வு பேனர்கள் சிறியளவில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை, பல நிறுவனங்கள் நன்கொடையாக வழங்குகின்றன. அந்த 'பேரிகார்டு' மற்றும் 'பேனர்'களில், அந்நிறுவனங்களின் விளம்பரமும் இடம் பெறுகிறது.தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிறுவனங்களிடம் நட்புறவுடன் இருக்கும் போலீசார், அனுமதியின்றி அவர்கள் வைக்கும் விளம்பர பலகைகளை அகற்ற முன்வருவதில்லை. மாவட்ட நிர்வாகமும் இதை கண்டுகொள்வதில்லை. அனுமதியின்றி விளம்பர பலகை முளைக்க. இதுவும் ஒரு முக்கிய காரணம்.எனவே, சாலையோரம் மற்றும் பொது இடங்களில் வைக்கப்படும், விளம்பர பலகைகளை பாரபட்சமின்றி அதிரடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X