சம்பவம் செய்தி

தமிழ்நாடு

5 கோடி லிட்டர் பி.ஏ.பி., நீர் திருட்டு விவசாயிகள் 'பகீர்' புகார்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திருப்பூர் : ''பட்டா நிலத்தில் அமைத்துள்ள குளங்கள் மூலம், ஐந்து கோடி லிட் டர் தண்ணீரை, தென்னை நார் தயாரிப்பு நிறுவனங்கள் தேக்கிவைத்து பயன்படுத்துகின்றன'' என்று, பி.ஏ.பி., ஆயக்கட்டு விவசாயிகள் நலசங்கம் குற்றம்சாட்டியுள்ளது.வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த, பி.ஏ.பி.,(பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்) பாசன விவசாயிகள், பி.ஏ.பி., நீர் நிர்வாகத்தை முறைப்படுத்தி, கடைமடை வரை தண்ணீர்

திருப்பூர் : ''பட்டா நிலத்தில் அமைத்துள்ள குளங்கள் மூலம், ஐந்து கோடி லிட் டர் தண்ணீரை, தென்னை நார் தயாரிப்பு நிறுவனங்கள் தேக்கிவைத்து பயன்படுத்துகின்றன'' என்று, பி.ஏ.பி., ஆயக்கட்டு விவசாயிகள் நலசங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த, பி.ஏ.பி.,(பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்) பாசன விவசாயிகள், பி.ஏ.பி., நீர் நிர்வாகத்தை முறைப்படுத்தி, கடைமடை வரை தண்ணீர் திறக்க வேண்டுமென, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.மனு விவரம்:வெள்ளகோவில் பகுதிக்கு, 14 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் திறக்காமல், 30 நாட்கள் இடைவெளி ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தண்ணீர் முறைகேட்டை தடுக்க, சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.கோவை மாவட்டம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு தென்னை நார் தயாரிப்பு நிறுவனங்கள், பட்டா நிலத்தில், 300 குளங்களை அமைத்து, ஐந்து கோடி லிட்டர் வரை தேக்கி வைத்து பயன்படுத்துகின்றன.

கால்வாய் அருகே உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளுக்கும், தண்ணீர் எடுக்கப்படுகிறது. தண்ணீர் திருட்டை தடுக்க, கடும் நடவடிக்கை இல்லாதவரை, பாசன திட்டத்தால் வறட்சியான பகுதிகள் பயன்பெற முடியாது.பி.ஏ.பி., ஆயக்கட்டு பகுதியில், 20 சதவீதம் தண்ணீர் கிடைப்பதே இல்லை; இதனால், விளை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு சென்று கொண்டிருக்கின்றன. மாதம், 10 சுற்று தண்ணீர் கிடைக்க வேண்டியது, ஐந்து சுற்றுகள் மட்டுமே கிடைக்கிறது.நீர் நிர்வாகத்தை முறைப்படுத்தி, மற்ற பகுதிகளுக்கு ஒதுக்கியுள்ளது போல், வெள்ளகோவில் வாய்க்காலுக்கும், சரியான அளவு தண்ணீர் வழங்க வேண்டும். உபரிநீர் இருக்கும் போது, உப்பாறு மற்றும் வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் திருப்பிவிடலாம்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X