இது உங்கள் இடம்: நாட்டின் மீது அக்கறை காட்டுங்கள்!| Dinamalar

இது உங்கள் இடம்: நாட்டின் மீது அக்கறை காட்டுங்கள்!

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (72) | |
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.மணியன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு வழக்கு விசாரணையின் போது, 'இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. அது, நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்துவிடும்' என, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா
Congress, P Chidambaram, pegasus


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


எஸ்.மணியன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு வழக்கு விசாரணையின் போது, 'இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. அது, நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்துவிடும்' என, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை துாக்கிப் பிடித்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், 'இதன் மூலம் போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு, மக்கள் வாழ்க்கைத்தரம் போன்றவை குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எந்த கவலையும் கிடையாது. அவர்களுக்குள்ள ஒரே கவலை, 'நாம் இந்த நாட்டை சூறையாட முடியவில்லையே; ஊழல் செய்து சொத்து சேர்க்க முடியவில்லையே' என்பது தான். ஒற்றறிவது என்பது நாட்டின் நிர்வாகத்தில் மிக முக்கியமான ஒன்று. பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றால், ஒற்றறியாமல் என்ன செய்வதாம்?


latest tamil news


இந்த உளவு பார்ப்பது என்பது, பிரதமர் மோடியால் மட்டும் செயல்படுத்தப்படும் புதிய முறை அல்ல. மன்னர் ஆட்சிக் காலத்தில் இருந்தே நடக்கும் செயல் தான். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒற்றறிதல் ஏதும் நடக்கவில்லையா என்ன? நாட்டை ஆளும் மன்னன் எப்படி எப்படியெல்லாம் உளவறிய வேண்டும் என்பது குறித்து, 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர், 'ஒற்றாடல்' என்ற தலைப்பில் 10 குறள்களை எழுதிச் சென்றிருக்கிறார்.

'பெகாசஸ் விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னையும் உள்ளது' என, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெளிவாகக் கூறியிருக்கிறார். அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாதவரா சிதம்பரம்? 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ' என்ற ரீதியில் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் காங்கிரசார், கொஞ்சம் நாட்டின் மீது அக்கறை காட்ட முயற்சிக்கலாமே!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X