பொது செய்தி

தமிழ்நாடு

'30 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு'

Added : ஆக 26, 2021
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், அதன் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் மனோகரன், மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்;சேதுமாதவன் (தி.மு.க.,): பழங்கரை ஊராட்சியை பேரூராட்சியாகவோ, இரண்டு ஊராட்சிகளாகவோ மாற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.தலைவர்: பழங்கரை ஊராட்சி நிர்வாகம், பேரூராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக தீர்மானம்

அவிநாசி : அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், அதன் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் மனோகரன், மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்;சேதுமாதவன் (தி.மு.க.,): பழங்கரை ஊராட்சியை பேரூராட்சியாகவோ, இரண்டு ஊராட்சிகளாகவோ மாற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.தலைவர்: பழங்கரை ஊராட்சி நிர்வாகம், பேரூராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி வழங்கினால், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்கும், 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது; மேற்கொள்ள வேண்டிய பணி குறித்த விவரத்தை வழங்க வேண்டும்.'ஜல் ஜீவன்' திட்டத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இணைப்பு தேவைப்படுவோர் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்.முத்துசாமி(மா.கம்யூ.,): கணியாம்பூண்டி, புதுப்பாளையத்தில் தலா, 30 ஆயிரம் லிட்டர் கொண்ட குடிநீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.கார்த்திகேயன் (சுயே..);ஊராட்சி ஒன்றியம் சார்ந்த அரசாணை, மாவட்ட நிர்வாக அறிவிப்புகளை உறுப்பினர்களுக்கு 'தெரியப்படுத்த வேண்டும். தினசரி தடுப்பூசி செலுத்தும் விவரம் தெரிவிக்க வேண்டும்.அய்யாவு (அ.தி.மு.க.,): துலுக்கமுத்தூரில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.விவாதங்களை தொடர்ந்து, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், வருவாய்த்துறையினர் பங்கேற்காததால், அவர்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அல்லது, வெளிநடப்பு செய்கிறோம் என, கவுன்சிலர் முத்துசாமி கூறினார்.

இத்தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்று, கவுன்சிலர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.''ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்கும், 7 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கப்பட உள்ளது; மேற்கொள்ள வேண்டிய பணி குறித்தவிவரத்தை வழங்க வேண்டும் ''

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X