தமிழ்நாடு

விளம்பர பலகைகள் அகற்றும் பணி துவக்கம்; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர் : தினமலர்' செய்தி எதிரொலியாக திருப்பூரில், விளம்பர பலகைகள் அகற்றும் பணியை, மாநகராட்சி ஊழியர்கள் துவங்கினர்.திருப்பூரில் தேசிய, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி ரோடுகள் என அனைத்து சாலைகளிலும், விளம்பர பலகைகள், சிறிது முதல் பெரிய அளவு வரை வைக்கப்பட்டுள்ளன.கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தவிர, ஏராளமான விளம்பர பலகைகள் நகரின் பல்வேறு
 விளம்பர பலகைகள் அகற்றும் பணி துவக்கம்; மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருப்பூர் : தினமலர்' செய்தி எதிரொலியாக திருப்பூரில், விளம்பர பலகைகள் அகற்றும் பணியை, மாநகராட்சி ஊழியர்கள் துவங்கினர்.

திருப்பூரில் தேசிய, மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி ரோடுகள் என அனைத்து சாலைகளிலும், விளம்பர பலகைகள், சிறிது முதல் பெரிய அளவு வரை வைக்கப்பட்டுள்ளன.கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தவிர, ஏராளமான விளம்பர பலகைகள் நகரின் பல்வேறு கட்டடங்களின் மேல் மாடி, உயரமான சுவர்கள், ரோட்டோரம் உள்ள காலியிடங்களில், பொருத்தப்பட்டுள்ளன.ஆனால், பெரும்பாலான விளம்பரப்பலகைகள் வைக்க எவ்வித அனுமதியையும் பெறவில்லை.அனுமதி பெற்றதாக கூறப்படும் விளம்பரப் பலகைகளும், விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்படவில்லை.திருப்பூரில், இதுபோன்ற விளம்பர பலகைகள் குறித்து நேற்று 'தினமலர்' நாளிதழில், படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது.


களம் இறங்கி ஆய்வு

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் விளம்பர பலகைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதில், பல்லடம் ரோட்டில் உள்ள சில கட்டட உரிமையாளர்கள் தங்கள் கட்டடங்களில் உள்ள விளம்பர பேனர்களை அவர்களே அகற்றிக் கொள்வதாக தெரிவித்தனர். இதனால், அவற்றுக்கு நாளை வரை இரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று மாலை வரை ஐந்து இடங்களில் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.குழு நியமிக்க வேண்டும்அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு, பி.என்., ரோடு உட்பட பல சாலைகளிலும் உள்ள விளம்பரப் பலகைகள் குறித்து, உடனடியாக அதிகாரிகள் ஆய்வைத் துவக்கவில்லை.

ஆய்வை, வேகமாக முடித்து, நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொள்வது அவசியமானது.மாநகராட்சி பகுதியில் பகுதிவாரியாக இதற்கு குழு நியமித்து விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு செய்து, விளம்பர பலகைகள் அகற்றப்பட வேண்டும். வழக்கமாக விளம்பரப் பலகைகளை அகற்ற ஓரிருநாள் மட்டும் 'அக்கறை' காட்டிவிட்டு, பின், அமைதியாகிவிடுவது, அதிகாரிகளின் வழக்கமாக உள்ளது. விளம்பரப் பலகை அகற்றத்தில், எவ்வித சுணக்கமும், தயக்கமும் இல்லாத வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.கோர்ட் உத்தரவை மதிக்காமல் விளம்பரப்பலகைகள் வைப்பது தடுக்கப்பட வேண்டும்; உறுதியான நடவடிக்கையால் மட்டுமே இந்தக் கலாசாரத்தை அதிரடியாக ஒழிக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஆக-202108:55:02 IST Report Abuse
அப்புசாமி இதுக்கெல்லாம் அனுமதி குடுத்து துட்டு வாங்குன அதிகாரிங்க மீது ஆக்ஷன் எங்கே? யாருகண்டா? இப்போ தூக்குறவங்ஜதான் அப்போ துட்டு அடிச்சிருப்பாய்ங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X