பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர்காப்பீடு திட்டம் 490 பேர் பயன்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திருப்பூர் : முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம், பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும், 1,027 வகையான சிகிச்சை முறை, 154 தொடர் சிகிச்சைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.காப்பீடு அட்டை பெற்ற குடும்பத்தினர், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் காப்பீடு தொகையாக பெற முடியும். திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச்

திருப்பூர் : முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம், பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும், 1,027 வகையான சிகிச்சை முறை, 154 தொடர் சிகிச்சைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.காப்பீடு அட்டை பெற்ற குடும்பத்தினர், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் காப்பீடு தொகையாக பெற முடியும்.

திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் வரை காது, மூக்கு, தொண்டை, எலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை, காது கேளாதவருக்கு இலவச காது கேட்கும் கருவி, டயாலிசஸ், சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் என, 490 பயனாளிகளுக்கு காப்பீடு திட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, 37.28 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லுாரி அதிகாரிகள் கூறுகையில், 'என்னென்ன சிகிச்சைகளுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்ற விபரங்கள் என்ற CMCHISTN என்ற வலைதளத்தில் உள்ளது. மருத்துவ சிகிச்சை, நோய் கண்டறியும் முகாம் குறித்து சந்தேகங்களுக்கு தலைமை அரசு மருத்துவமனை காப்பீடு சிகிச்சை மையத்தை நாடலாம் அல்லது, 18004253993 என்ற எண்ணில் விபரங்களை பெறலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X