பொது செய்தி

தமிழ்நாடு

உணவுக்கு வழியில்லை தொழிலாளர்கள் கண்ணீர்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கோவை : மும்பையை சேர்ந்த கட்டுமான நிறுவனம் சம்பளம் தராததால், உணவுக்கு வழியின்றி தவிப்பதாக, கட்டுமான தொழிலாளர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.கோவை சரவணம்பட்டியில், மும்பையை சேர்ந்த கட்டுமான நிறுவனம், கட்டுமானப்பணி மேற்கொண்டுள்ளது. இதில், பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், 72 பேர் வேலை பார்க்கின்றனர்.இவர்களுக்கு, கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

கோவை : மும்பையை சேர்ந்த கட்டுமான நிறுவனம் சம்பளம் தராததால், உணவுக்கு வழியின்றி தவிப்பதாக, கட்டுமான தொழிலாளர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

கோவை சரவணம்பட்டியில், மும்பையை சேர்ந்த கட்டுமான நிறுவனம், கட்டுமானப்பணி மேற்கொண்டுள்ளது. இதில், பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், 72 பேர் வேலை பார்க்கின்றனர்.இவர்களுக்கு, கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நேற்று, கோவை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

'சம்பளம் மும்பையில் இருந்து, நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இப்போது தராமல் இழுத்தடிக்கின்றனர்' என புகார் தெரிவித்தனர்.பல லட்சம் ரூபாய் பணம் பாக்கியாக இருப்பதால், உணவுக்கு வழியின்றி தவிப்பதாகவும், சொந்த ஊரில் இருக்கும் குடும்பத்தினருக்கு, பணம் அனுப்ப முடியவில்லை என்றும், தொழிலாளர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X