திருமணமான பெண் தற்கொலை  ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவு| Dinamalar

திருமணமான பெண் தற்கொலை  ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவு

Added : ஆக 26, 2021
கோவை : திருமணமான இரண்டு ஆண்டுகளில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தப்படுகிறது.கோவை, நியூ சித்தாபுதுார், சி.கே., காலனியை சேர்ந்தவர் மகேஷ்குமார்; இவரது மனைவி உமா மகேஸ்வரி, 35. இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த வாரம் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அருகே உள்ள தனது அக்கா

கோவை : திருமணமான இரண்டு ஆண்டுகளில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தப்படுகிறது.



கோவை, நியூ சித்தாபுதுார், சி.கே., காலனியை சேர்ந்தவர் மகேஷ்குமார்; இவரது மனைவி உமா மகேஸ்வரி, 35. இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த வாரம் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அருகே உள்ள தனது அக்கா வீட்டுக்கு, குழந்தையுடன் உமா மகேஸ்வரி சென்று தங்கியிருந்தார்.

அவரது அக்கா, கணவருடன் சென்று சேர்ந்து இரு என, அறிவுறுத்தியதால், மீண்டும் குழந்தையுடன் இரண்டு நாட்களுக்கு முன், கணவர் வீட்டுக்கு சென்றார்.இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென விஷம் குடித்த பெண், வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உமா மகேஸ்வரி உயிரிழந்தார்.இது குறித்து, காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருமணமாகி, இரண்டு ஆண்டுகளுக்குள் பெண் தற்கொலை செய்துள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X