பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்முனைவோருக்கு வாய்ப்பு அளிக்கும் திட்டம் 

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கோவை : எஸ்.என்.எஸ்., கல்விக்குழுமம் மற்றும் கல்லுாரி இன்னோவேஷன் ஹப் இணைந்து, புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான தொழில் திட்ட நிதியுதவிசார்ந்த, இணையவழி கருத்தரங்கை நடத்தியது.இதற்கான நிதியுதவியை, சென்னை பயோஇன்குபேட்டர், ஐ.ஐ.டி.எம் மற்றும் பெங்களூரு செல்லுலார், மாலிக்குலார் பிளாட்பார்ம்ஸ் இணைந்து வழங்கியுள்ளனர்.இத்திட்டத்தின் கீழ், பிராக்ஸ் எனப்படும், உயிரி

கோவை : எஸ்.என்.எஸ்., கல்விக்குழுமம் மற்றும் கல்லுாரி இன்னோவேஷன் ஹப் இணைந்து, புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான தொழில் திட்ட நிதியுதவிசார்ந்த, இணையவழி கருத்தரங்கை நடத்தியது.

இதற்கான நிதியுதவியை, சென்னை பயோஇன்குபேட்டர், ஐ.ஐ.டி.எம் மற்றும் பெங்களூரு செல்லுலார், மாலிக்குலார் பிளாட்பார்ம்ஸ் இணைந்து வழங்கியுள்ளனர்.இத்திட்டத்தின் கீழ், பிராக்ஸ் எனப்படும், உயிரி தொழில்நுட்பம் ஆரம்ப கட்ட நிதியுதவியில் முதன்மை கவனம் செலுத்தப்படும். இந்த திட்டத்தில், பொருளாதார முன்னேற்றத்துக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தனி நபர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், சந்தைக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் துவங்குவதும், இதன் ஒரு பகுதியாக இருக்கும்.

புதிய கண்டுபிடிப்பாளர்களின் தயாரிப்பை, வணிகப்படுத்த தலா , 50 லட்சம்ருபாய் நிதியுதவியும், வெற்றிகரமாக செயல்படுத்தும் பட்சத்தில், 1 கோடி ரூபாய் வரை நிதியுதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் நடந்த நிகழ்ச்சியில்,பெங்களூரு சி--கேம்ப் திட்ட மேலாளர் நித்யா ராமன், ஐ.ஐ.டி.எம்., பயோஇன்குபேட்டர் முதுநிலை மேலாளர் பிரியா, எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் தலைவர் சுப்ரமணியன், தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆர்வமுள்ளவர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளை செப்., 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, director.research@snsihub.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X