பொது செய்தி

தமிழ்நாடு

கோலோச்சிய அதிகாரிகளுக்கு போதாத காலம்! டிரான்ஸ்பர், பதவி பறிப்பால் 'ஆட்டம்'

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில், உதவி நகரமைப்பு அலுவலர்கள் இருவரின் பதவி பறிக்கப்பட்டது.மேற்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் சரவணக்குமார், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவு நிர்வாக பொறியாளராக, கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இவர், வாகன பராமரிப்பு மற்றும் திடக்கழிவு

கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் உதவி நிர்வாக பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதில், உதவி நகரமைப்பு அலுவலர்கள் இருவரின் பதவி பறிக்கப்பட்டது.மேற்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் சரவணக்குமார், ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவு நிர்வாக பொறியாளராக, கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இவர், வாகன பராமரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பிரிவுக்கு, உதவி நிர்வாக பொறியாளராக நேற்று நியமிக்கப்பட்டார். கூடுதலாக, வெள்ளலுார் உரக்கிடங்கு திட்டப்பொறியாளராக பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவு உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன் மத்திய மண்டலத்துக்கும், கருப்பசாமி தெற்கு மண்டலத்துக்கும், சுந்தர்ராஜ் கிழக்கு மண்டலத்துக்கும் மாற்றப்பட்டனர்.வடக்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் செந்தில் பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் பணியை கூடுதலாக கவனிக்க வேண்டும். மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, மேற்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளராக நியமிக்கப்பட்டார்.

வடக்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் ஜெயலட்சுமி தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டார். பிரதான அலுவலகத்தில் பணிபுரிந்த கலாவதி, மேற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர், பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்தும் பணியை, கூடுதலாக கவனிக்க வேண்டும்.கிழக்கு மண்டலத்தில் உதவி நிர்வாக பொறியாளராக பணிபுரியும் பாபு, மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

இவரை, உதவி நிர்வாக பொறியாளராக நியமித்ததற்கு, அரசு அங்கீகாரம் எதிர்பார்த்து இருப்பதால், உதவி பொறியாளர் சம்பளமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உதவி பொறியாளர் விமலா கவனித்து வந்த, தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர், உதவி பொறியாளர் சத்யா கவனித்து வந்த, மேற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பணியிடங்களில் இருந்து விடுவிக்கப்படுவதாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X