சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மார்க்கெட்டில் 700 கடைகள் 'சீல்' எதிர்ப்பு தெரிவித்த 500 வியாபாரிகள் கைது

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஊட்டி : ஊட்டி மார்க்கெட்டில், வாடகை பாக்கி வைத்த 700 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தது. மறியலில் ஈடுபட முயன்ற, 500 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில், 1,587 கடைகள் உள்ளன. கடைகளுக்கு வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கப்பட்டது. நிலுவை தொகையை வியாபாரிகள் செலுத்தவில்லை. நிலுவை வாடகை

ஊட்டி : ஊட்டி மார்க்கெட்டில், வாடகை பாக்கி வைத்த 700 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தது.

மறியலில் ஈடுபட முயன்ற, 500 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில், 1,587 கடைகள் உள்ளன. கடைகளுக்கு வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கப்பட்டது. நிலுவை தொகையை வியாபாரிகள் செலுத்தவில்லை. நிலுவை வாடகை பாக்கி, 38 கோடி ரூபாயை எட்டியது.வாடகை செலுத்த ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டது. எனினும், வியாபாரிகள் வாடகை செலுத்தவில்லை.

முதல் கட்டமாக, 700 கடைகளுக்கு 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.நகராட்சி கமிஷனர் சரஸ்வதி தலைமையில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 'சீல்' வைக்கும் பணியை நேற்று துவக்கினர். வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 43 பெண்கள் உட்பட, 500 பேர் கைது செய்யப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.'வாடகை செலுத்தினால் அனுமதி'நகராட்சி கமிஷனர் சரஸ்வதி கூறுகையில், ''வாடகை செலுத்தினால் கடை திறக்க அனுமதி வழங்கப்படும். நிலுவை வாடகை செலுத்தாதபட்சத்தில், கடைகள் ஏலம் விடப்படும்,'' என்றார்.மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா கூறுகையில், ''மறு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகையை செலுத்த வியாபாரிகள் தயாராக உள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக அவகாசம் கேட்டோம். 1,000 குடும்பங்கள் பாதிக்கப்படுவதால், 'சீல்' வைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,'' என்றார்.கடைகள் மூடப்பட்டதால், 300 டன் மலை காய்கறிகளை சந்தையில் விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X