அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.516 கோடி முறைகேடு: சட்டசபையில் மந்திரி தகவல்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை : ''கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 13.91 லட்சம் பேர் நகைக்கடன் பெற்று உள்ளனர். தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்'' என கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி கூறினார். கடந்த ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில் 516 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்ற பகீர் தகவலையும் வெளியிட்டார்.சட்டசபையில் அமைச்சர் பெரியசாமியின் பதிலுரை:பயிர்கடன் ரத்து
சட்டசபை, அமைச்சர், பெரியசாமி

சென்னை : ''கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 13.91 லட்சம் பேர் நகைக்கடன் பெற்று உள்ளனர். தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்'' என கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி கூறினார். கடந்த ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில் 516 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்ற பகீர் தகவலையும் வெளியிட்டார்.


சட்டசபையில் அமைச்சர் பெரியசாமியின் பதிலுரை:


பயிர்கடன் ரத்து செய்யப்பட்டோரில் 80 சதவீதம் பேருக்கு ரசீது வழங்கி விட்டோம். மீதமுள்ள 20 சதவீதம் பேருக்கு மட்டுமே ரசீது வழங்க வேண்டும். அடங்கலில் குறிப்பிட்ட சாகுபடி பரப்பரளவை விட கூடுதலாக பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் 516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளது.

சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் இவ்வாறு 503 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பட்டியலை எதிர்கட்சி தலைவருக்கு தர தயாராக இருக்கிறோம். கடன் தள்ளுபடியை எதிர்நோக்கி கூட்டுறவு துறை அமைச்சர் எல்லாம் திட்டம் போட்டு செய்த காரியமாக எனக்கு தெரிகிறது. ஒவ்வொரு கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. இதில் எதுவுமே பதிவு செய்வது கிடையாது. வசூலான பணத்தை வங்கியிலும் டிபாசிட் செய்யவில்லை. தரிசு நிலத்திற்கு பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.


latest tamil newsநடப்பாண்டு ஜன. 31க்கு முன் பெற்ற பயிர்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என காலவரையறை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் முன்தேதியிட்டு பயிர்கடன் பெற்றதாக பிப்ரவரி மாதத்தில் பெற்ற பயிர்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.


நகை கடன் தள்ளுபடி


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டது. அதனால் ஒரே நபர் பல இடங்களில் கடன் வாங்கியது அதிகம் நடந்துள்ளது. இவ்வாறு 13 லட்சத்து 91 ஆயிரத்து 656 பேர் பல இடங்களில் நகை கடன் வாங்கியுள்ளனர். இவ்வாறு 5796 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதற்கு விரைவில் முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு அமைச்சர் பெரியசாமி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
26-ஆக-202112:04:47 IST Report Abuse
vpurushothaman மொத்தமா அ தி மு க ஆட்சி ஊழலாட்சினு கேஸ் போட்டுடுங்க சொக்கத் தங்கங்களா? புனித கங்கையும் புண்ணியக் காவிரியும் கருணாநிதி கட்சி மட்டுமே என அவசரச் சட்டம் போட்டுடுங்க சாமியோவ்.
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
26-ஆக-202111:50:53 IST Report Abuse
Vivekanandan Mahalingam போப் சொன்னால் தள்ளுபடி ஆகுமோ ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-ஆக-202108:58:32 IST Report Abuse
duruvasar வாக்குறுதிகளெல்லாம் மக்களின் காதுகளில் சுற்றிய பூ என்பதை ஒவ்வொரு அமைச்சரும் அவரவர் பாணியில் அவிழ்த்து விடுகிறார்கள். தங்கள் எம் எல்ஏக்களிடம் இருந்த 10 வருட நிதிநிலை அறிக்கையின் பிரதிகளை தொகுத்து எக்ஸல் ஷீட்டில் போட்டு அதன் தொகுப்பை ஏ4 ஷீட்டில் துறை வாரியாக கொடுத்து அதற்க்கு " வெள்ளை அறிக்கை" என பெயரிட்டபோதே இந்த கண்கட்டி வித்தை ஆரம்பமாகிவிட்டது. இப்போது ஒவ்வொரு அமைச்சரும் அவரவர்களுக்கு பிடித்த கலரில் "கலர் அறிக்கை"யாக வெளியிடுகிறார்கள். அதுபோக இதற்கெல்லாம் போப்பாண்டவர் அனுமதி கொடுத்து விட்டாரா ?
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-ஆக-202111:51:44 IST Report Abuse
Dhurveshவாக்குறுதிகளெல்லாம் மக்களின் காதுகளில் சுற்றிய பூ::: 1 பண மதியிழப்பு நன்மை என்ன கிடைச்சது. 2 GST ல மாநிலங்களுக்கு எவ்ளோ நஷ்டம் 3 ஒவ்வொருத்தருக்கும் 15 லட்சம் கிடைக்கும்னு சொன்னது என்னாச்சு.. 4 வருஷத்துக்கு 35 லட்சம் வேலைவாய்ப்புகள் .என்னாச்சு.. 5 பெட்ரோல் விலை ஒரே வருஷத்துல 43 வாட்டி ஏன் உயர்ந்தது 6 பெட்ரோல் மேல் கலால் வரி 450 % ஏன் உயர்த்தப்பட்டது.. 7 இதுவரை இல்லாத வங்கி சேவை கட்டணம் ஏன். 8 இதுவரை இல்லாத தொழிலாளர்கள் PF வரி ஏன் 9 மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளை தனியார் மயமாக்கியது ஏன். 10. இதுவரை இல்லாம GDP ஏன் -7.5 % ஆச்சு. 11 . நாம சுதந்திரம் வாங்கிக்குடுத்த பங்களாதேஷ் நம்மளவிட எப்படி முன்னேறிச்சு. 12 . அச்சா தின் ஆரஹா ஹை ...எப்போ வரும் ..ஏழு வருஷம் ஆச்சு.. இந்த மாதிரி கேள்வி யாரும் கேக்கமாட்டாங்கன்னு உறுதி குடுங்க ..நாங்க விவாதம் பண்ண ரெடி....
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
26-ஆக-202114:00:56 IST Report Abuse
duruvasarஇந்த கேள்விகளை கேட்டக போப்பாண்டவர் அனுமதி கிடைத்துவிட்டதா ?...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-ஆக-202118:39:12 IST Report Abuse
தமிழவேல் பதில் இல்லேன்னா ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X