ரூ.516 கோடி முறைகேடு: சட்டசபையில் மந்திரி தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.516 கோடி முறைகேடு: சட்டசபையில் மந்திரி தகவல்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (16)
Share
சென்னை : ''கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 13.91 லட்சம் பேர் நகைக்கடன் பெற்று உள்ளனர். தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்'' என கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி கூறினார். கடந்த ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில் 516 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்ற பகீர் தகவலையும் வெளியிட்டார்.சட்டசபையில் அமைச்சர் பெரியசாமியின் பதிலுரை:பயிர்கடன் ரத்து
சட்டசபை, அமைச்சர், பெரியசாமி

சென்னை : ''கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 13.91 லட்சம் பேர் நகைக்கடன் பெற்று உள்ளனர். தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்'' என கூட்டுறவு அமைச்சர் பெரியசாமி கூறினார். கடந்த ஆட்சியில் பயிர்கடன் வழங்கியதில் 516 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்ற பகீர் தகவலையும் வெளியிட்டார்.


சட்டசபையில் அமைச்சர் பெரியசாமியின் பதிலுரை:


பயிர்கடன் ரத்து செய்யப்பட்டோரில் 80 சதவீதம் பேருக்கு ரசீது வழங்கி விட்டோம். மீதமுள்ள 20 சதவீதம் பேருக்கு மட்டுமே ரசீது வழங்க வேண்டும். அடங்கலில் குறிப்பிட்ட சாகுபடி பரப்பரளவை விட கூடுதலாக பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் 516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளது.

சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் இவ்வாறு 503 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பட்டியலை எதிர்கட்சி தலைவருக்கு தர தயாராக இருக்கிறோம். கடன் தள்ளுபடியை எதிர்நோக்கி கூட்டுறவு துறை அமைச்சர் எல்லாம் திட்டம் போட்டு செய்த காரியமாக எனக்கு தெரிகிறது. ஒவ்வொரு கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. இதில் எதுவுமே பதிவு செய்வது கிடையாது. வசூலான பணத்தை வங்கியிலும் டிபாசிட் செய்யவில்லை. தரிசு நிலத்திற்கு பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.


latest tamil newsநடப்பாண்டு ஜன. 31க்கு முன் பெற்ற பயிர்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என காலவரையறை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் முன்தேதியிட்டு பயிர்கடன் பெற்றதாக பிப்ரவரி மாதத்தில் பெற்ற பயிர்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.


நகை கடன் தள்ளுபடி


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டது. அதனால் ஒரே நபர் பல இடங்களில் கடன் வாங்கியது அதிகம் நடந்துள்ளது. இவ்வாறு 13 லட்சத்து 91 ஆயிரத்து 656 பேர் பல இடங்களில் நகை கடன் வாங்கியுள்ளனர். இவ்வாறு 5796 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதற்கு விரைவில் முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு அமைச்சர் பெரியசாமி கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X