சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்...

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மளிகைக் கடையில் திருட்டுவிழுப்புரம்: காணை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மனைவி புவனேஸ்வரி, 39; இவர், மெயின் ரோட்டில் மளிகைக் கடை வைத்துள்ளார். இவரது கடையின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள், கல்லா பெட்டியில் இருந்த 5,000 ரூபாய் மற்றும் அங்கிருந்த 6,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து

மளிகைக் கடையில் திருட்டுவிழுப்புரம்: காணை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மனைவி புவனேஸ்வரி, 39; இவர், மெயின் ரோட்டில் மளிகைக் கடை வைத்துள்ளார். இவரது கடையின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள், கல்லா பெட்டியில் இருந்த 5,000 ரூபாய் மற்றும் அங்கிருந்த 6,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.முன்விரோத தகராறு8 பேர் மீது வழக்குகள்ளக்குறிச்சி: அண்ணா நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் மனைவி மஞ்சுளா, 35; சேலம் மெயின் ரோட்டில் பூட்டு கடை வைத்துள்ளார். பக்கத்தில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குமார், 47; துணிக்கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 14ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இரு குடும்பத்தினரும் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், குமார், அசோக்குமார், கோதண்டம், குணா, சாமுவேல், மஞ்சுளா, வினோதினி உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மகள் மாயம்: தாய் புகார்விழுப்புரம்: கே.கே., ரோடு, முத்துவேல் லே அவுட்டைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் மகள் சந்தியா, 21; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. சந்தியா தாய் சுந்தரி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.முன்விரோத தகராறுஒருவர் மீது வழக்குகள்ளக்குறிச்சி: அகரகோட்டாலம் காட்டுகொட்டாயைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 51; இவர், நேற்று முன்தினம் காலை அகரகோட்டாலத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 37; முன்விரோதம் காரணமாக அண்ணாதுரையிடம் தகராறு செய்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் செல்வம் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.மளிகை கடையில் திருட்டுதிண்டிவனம்: மயிலம் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் முத்து, 49; இவர், திண்டிவனம் மேம்பாலம் கீழ், மரக்காணம் சாலையில் மளிகைக் கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறந்து பார்த்தபோது, மேற்கூரை பிரிக்கப்பட்டு கடையில் கல்லா பெட்டியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.அடையாளம் தெரியாத பெண் சாவு செஞ்சி: செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் பெருங்காப்பூர் முட்டுக்காடு பகுதியில் சில நாட்களாக 50 வயதுடைய பெயர், விலாசம் தெரியாத மன நிலை பாதிக்கப்பட்ட பெண் சுற்றி வந்தார். இவர் நேற்று அதிகாலை சாலையோரம் இறந்து கிடந்தார். இது குறித்து வி.ஏ.ஓ., சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கோவிலில் திருட முயற்சிஉளுந்துார்பேட்டை: பி.டி.ஓ., அலுவலகம் அருகே உள்ள பெரியாயி கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். அங்கு ஏதும் இல்லாததால் திரும்பிச் சென்றனர். உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடந்த 4 நாட்களுக்கு முன் இதே கோவிலின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து திருட முயன்றது குறிப்பிடத்தக்கது.தேர் திருவிழா: 8 பேர் மீது வழக்குசெஞ்சி: அவியூர் கிராமத்தில் கடந்த 24 ம் தேதி தேர் திருவிழா நடந்தது. இதில் கிராமத்தில் இரு தரப்புக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து செஞ்சி தாசில்தார் ராஜன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அன்றைய உபயதாரர்கள் வல்லம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் அண்ணாதுரை உட்பட 8 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில் அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதியில் தேர் ஓட்டுவதில்லை என முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதனை மீறி தேர் திருவிழா வழக்கம் போல் நடத்தினர். வி.ஏ.ஓ., கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உட்பட 8 பேர் மீது செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்தனர்.மினி லாரி மோதி மூதாட்டி பலிவிழுப்புரம்: வளவனுார் அடுத்த கலிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சபாபதி மனைவி லட்சுமி, 70; இவர், அதே பகுதியில் உள்ள பிள்ளையார்கோவில் அருகே நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நின்றிருந்தார். அப்போது, கரையாம்புத்துாரில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் நோக்கிச் சென்ற பொலிரோ பிக்கப் மினி லாரி லட்சுமி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பெண் மானபங்கம்: மூவர் கைதுமூங்கில்துறைப்பட்டு: சவரியார்பாளையம் ஏரிக்கரையைச் சேர்ந்தவர் ஜேக்கப் மனைவி ஜோஸ்பின் மேரி, 42; அதே பகுதியைச் சேர்ந்தவர் அம்புரோஸ், 54; இவர்களுக்கிடையே இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.இந்நிலையில் ஜேக்கப் வீட்டின் முன் இருந்த மரத்தை அம்புரோஸ் வெட்டினார். இதனை ஜோஸ்பின் மேரி தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த அம்புரோஸ் அவரை மானபங்கப்படுத்தியுள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஜோஸ்பின் மேரி மகள் பிரின்சி சவுமியா டயானாவையும், 20; தாக்கினார்.புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து, அம்புரோஸ், அருளப்பன் மகன் குமார், 30; மரியசெல்வம் மகன் பீட்டர், 23; ஆகிய மூவரையும் கைது செய்தனர்.டிராக்டர் மாயம்திருக்கோவிலுார்: கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன், 46; இவர் தனது டிராக்டரை வயலில் உள்ள கொட்டகையில் கடந்த 21ம் தேதி இரவு நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை பார்த்தபோது டிராக்டரைக் காணவில்லை. புகாரின் பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.லாட்டரி சீட்டு விற்றவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: பெண்ணைவலம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்ற ராதாகிருஷ்ணன், 30; என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X