தே.மு.தி.க., நலத்திட்ட உதவிகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Added : ஆக 26, 2021
Share
தியாகதுருகம்-தியாகதுருகம் தே.மு.தி.க.,வினர் விஜயகாந்த் பிறந்த நாளை நலத்திட்ட உதவி வழங்கும் விழாவாக கொண்டாடினர்.விழாவையொட்டி, அனைத்து கிளை மற்றும் நகரில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். தொடர்ந்து தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன்

தியாகதுருகம்-தியாகதுருகம் தே.மு.தி.க.,வினர் விஜயகாந்த் பிறந்த நாளை நலத்திட்ட உதவி வழங்கும் விழாவாக கொண்டாடினர்.விழாவையொட்டி, அனைத்து கிளை மற்றும் நகரில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். தொடர்ந்து தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.தெற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, பொதுக்குழு உறுப்பினர் சிவலிங்கம் விவசாய துணைச் செயலாளர் சந்தோஷ் குமார், அவைத் தலைவர்கள் வெங்கடேசன், முத்து, பொருளாளர்கள் குமரேசன், சக்திவேல் முன்னிலை வகித்தனர்.மாநில தொழிற்சங்க துணைச் செயலாளர் தாமு சக்திவேல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கி, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.துணைச் செயலாளர்கள் சங்கர், பாபு, நிர்வாகிகள் அபாஸ், கோவிந்தராஜ், பஞ்சமூர்த்தி, செல்வராஜ், ஹாலன், சங்கர், ஏழுமலை, கர்ணா, பழனிசாமி, பாலு, ஏழுமலை, வேல்முருகன், ராஜா, சக்திவேல், குமார், கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X