பொது செய்தி

தமிழ்நாடு

கிரிக்கெட் போட்டி நடத்த போலீஸ் மறுப்பு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் அருகே கருணாநிதி நினைவு கிரிக்கெட் போட்டி நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு, ஈச்சேரி, அன்பின்பாதை கிருஷ்ணவேணி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் தி.மு.க., பிரமுகர் சேகர் ஏற்பாடு செய்திருந்தார்.போட்டி நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது, போட்டியில் வெற்றி

திண்டிவனம்-திண்டிவனம் அருகே கருணாநிதி நினைவு கிரிக்கெட் போட்டி நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு, ஈச்சேரி, அன்பின்பாதை கிருஷ்ணவேணி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் தி.மு.க., பிரமுகர் சேகர் ஏற்பாடு செய்திருந்தார்.போட்டி நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது, போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முறையே ஒரு லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.போட்டிகள் நடத்த ஒலக்கூர் போலீசார் அனுமதி தர மறுத்தனர். இதனால் போட்டிகள் குறித்த நேரத்தில் நடத்த முடியவில்லை. போட்டியில் பங்கு பெறும் அணி வீரர்களிடம் போட்டி ஏற்பாட்டாளர் சேகர் பேச்சுவார்த்தை நடத்தி, முறைப்படி போலீஸ் அனுமதி கிடைத்த உடன், தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X