பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் தொழிற்பயிற்சி நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சின்னசேலம்-சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியருக்கு அளிக்கப்படும் தொழிற் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.சின்னசேலம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், ஒயர்மேன், மெக்கானிக் ஆகிய தொழிற் பிரிவுகளில் தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சியாளர்களின் திறன் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் மாணவ, மாணவியர்

சின்னசேலம்-சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியருக்கு அளிக்கப்படும் தொழிற் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.சின்னசேலம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், ஒயர்மேன், மெக்கானிக் ஆகிய தொழிற் பிரிவுகளில் தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சியாளர்களின் திறன் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் மாணவ, மாணவியர் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பினை உருவாக்கிட பயிற்சியாளர்கள் பயிற்றுவிக்க வேண்டும். மாணவ, மாணவியர் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள தொழிற்கல்வி பயின்று தொழில் முனைவோராக உயர்ந்திட வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்று நடப்பட்டது.ஆய்வின் போது, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரேம்குமார், சின்னசேலம் தாசில்தார் ஆனந்தசயனன் மற்றும் பயிற்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.சங்கராபுரம்சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வுக்கு வந்த கலெக்டரை தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் செந்தில்வேலன் வரவேற்றார். பயிற்சி நிலையத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தில் பயிற்றுவிக்கப்படும் தொழிற் பிரிவுகள், பொது மற்றும் தனியார் கூட்டமைப்புத் திட்டத்தில் செயல்படும் தொழிற் பிரிவுகள் மற்றும் குறுகிய கால பயிற்சிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.தொடர்ந்து, நிலையத்தில் 1.18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் சுற்றுச் சுவர் மற்றும் நுழைவு வாயில் பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது பயிற்சியாளர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X