பொது செய்தி

இந்தியா

100 ஆண்டுகள் பழமையான கிணறுகளை புதுப்பிக்க, தோட்டக்கலைத்துறை திட்டம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரின் லால்பாக் பூங்காவில், 100 ஆண்டுகள் பழமையான கிணறுகளை புதுப்பிக்க, தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:லால்பாக் 240 ஏக்கரில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் ஐந்து கிணறுகள் உள்ளன. ஒரு கிணற்றில் ஆரம்பத்திலிருந்தே தண்ணீர் கிடைக்கிறது. மற்றொரு கிணறு முந்தைய ஆண்டு சீரமைக்கப்பட்டது. மற்ற இரண்டு கிணறுகளை,

பெங்களூரு-பெங்களூரின் லால்பாக் பூங்காவில், 100 ஆண்டுகள் பழமையான கிணறுகளை புதுப்பிக்க, தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:லால்பாக் 240 ஏக்கரில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் ஐந்து கிணறுகள் உள்ளன. ஒரு கிணற்றில் ஆரம்பத்திலிருந்தே தண்ணீர் கிடைக்கிறது. மற்றொரு கிணறு முந்தைய ஆண்டு சீரமைக்கப்பட்டது. மற்ற இரண்டு கிணறுகளை, தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் சீரமைக்க திட்டமிட்டுள்ளோம். ஐந்து கிணறுகளும், கல் கட்டடத்தால் கட்டப்பட்டவையாகும். பல ஆண்டுகளாக சரியான நிர்வகிப்பின்றி, பாழடைந்து கிடந்ததால் சற்று பழுதடைந்துள்ளன. இக்கிணறுகள் சீரமைக்கப்படும். முதற் கட்டமாக கிணறுகளில் உள்ள குப்பை அப்புறப்படுத்தப்படும். பூங்காவின் ஐந்து கிணறுகளிலும், தண்ணீர் கிடைக்கிறது. கிணறுகளை சீரமைத்த பின், தினமும், 10 ஆயிரம் - 50 ஆயிரம் லிட்டர் பெறலாம்.லால்பாக் பூங்காவில், தண்ணீர் இருப்பை அதிகரிக்கும் நோக்கில், மழைநீர் சேகரிப்பு தொட்டி உட்பட, பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பூங்காவில் விழும் மழை நீர், வெளியே செல்லாமல் தடுக்கப்படுகிறது. பூங்காவுக்கு தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இங்குள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தின் தண்ணீர், பூங்காவுக்கு பயன்படுத்தப்படுகிறது.கிணறுகள் சீரமைக்கப்பட்ட பின், கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம். கிணறுகளை சுத்தமாக்கி, சீரமைக்கும் பணிகளின் பொறுப்பை, ராம கிருஷ்ணப்பா என்பவர் ஏற்றுள்ளார். இன்னும் சில வாரங்களில் பணிகள் முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X