எனக்கு எதிராக பேசியவர்களின் நிலை என்னவானது என்பது மக்களுக்கு தெரியும்.

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மைசூரு-''எனக்கு எதிராக பேசியவர்களின் நிலை என்னவானது என்பது மக்களுக்கு தெரியும். விஸ்வநாத்துக்கு ஏற்பட்ட நிலை, ஜி.டி.தேவகவுடாவுக்கும் ஏற்படக்கூடும்,'' என ம.ஜ.த., எம்.எல்.ஏ., மகேஷ் எச்சரித்தார்.மைசூரு பகுதியில், தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.டி.தேவகவுடா, மகேஷ் இடையே பலத்த போட்டி எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் இது முற்றியதில், ம.ஜ.த.,வை

மைசூரு-''எனக்கு எதிராக பேசியவர்களின் நிலை என்னவானது என்பது மக்களுக்கு தெரியும். விஸ்வநாத்துக்கு ஏற்பட்ட நிலை, ஜி.டி.தேவகவுடாவுக்கும் ஏற்படக்கூடும்,'' என ம.ஜ.த., எம்.எல்.ஏ., மகேஷ் எச்சரித்தார்.மைசூரு பகுதியில், தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.டி.தேவகவுடா, மகேஷ் இடையே பலத்த போட்டி எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் இது முற்றியதில், ம.ஜ.த.,வை விட்டு வெளியேறி, காங்கிரசில் சேர, தேவகவுடா முடிவு செய்துள்ளார்.இது தொடர்பாக, மகேஷ் மைசூரில் நேற்று கூறியதாவது:எனக்கெதிராக பேசியவர்களின் நிலை என்ன ஆயிற்று என்பது மக்களுக்கு தெரியும். விஸ்வநாத்துக்கு ஏற்பட்ட நிலையே, தேவகவுடாவுக்கும் ஏற்படும். பா.ஜ.,வுக்கு சென்ற 17 பேரில், விஸ்வநாத் மட்டுமே கரை சேரவில்லை. இந்த நிலை தேவகவுடாவுக்கு வரலாம்.தனிப்பட்ட, 'இமேஜ்' உள்ளது என கர்வத்துடன் நடந்தவர்களின் நிலை என்னவானது... ம.ஜ.த.,விலிருந்து சென்ற பலர், காணாமல் போனார்கள். என்னால் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்பதாக நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அவர் ம.ஜ.த.,வை பலப்படுத்துவதானால், நான் அரசியல் ஓய்வு பெறுவதாக கூறியிருந்தேன்.தேவகவுடா ம.ஜ.த.,வை விட்டு விலகினால், கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்பது, எங்களுக்கும் தெரியும். எனவே அவரை கட்சியில் தக்க வைத்துக்கொள்ள, எங்கள் தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.முன்னாள் முதல்வர் குமாரசாமி இருந்தால் மட்டுமே, நான் நீடிப்பேன் என்பது உண்மை தான். நான் சாதாரண தொண்டன். கட்சியும், குமாரசாமியும் இல்லையென்றால், நான் 'ஜீரோ' ஆகியிருப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X