கர்நாடகாவில், மாலை நேர வகுப்புகளை துவக்க, 11 கல்லூரிகளுக்கு மாநில அரசு அனுமதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில், மாலை நேர வகுப்புகளை துவக்க, 11 கல்லூரிகளுக்கு மாநில அரசு அனுமதி

Added : ஆக 26, 2021 | கருத்துகள் (1)
Share
பெங்களூரு-கர்நாடகாவில், மாலை நேர வகுப்புகளை துவக்க, 11 கல்லுாரிகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.கொரோனா காரணமாக, பி.யூ.சி., இரண்டாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடத்தாமல், தேர்ச்சி மட்டும் அறிவிக்கப்பட்டது. இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் அதிகரித்துள்ளது.கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதால், கூடுதல்

பெங்களூரு-கர்நாடகாவில், மாலை நேர வகுப்புகளை துவக்க, 11 கல்லுாரிகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.கொரோனா காரணமாக, பி.யூ.சி., இரண்டாமாண்டு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடத்தாமல், தேர்ச்சி மட்டும் அறிவிக்கப்பட்டது. இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் அதிகரித்துள்ளது.கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதால், கூடுதல் வகுப்புகள் துவக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இதன் அடிப்படையில், உயர்கல்வித் துறை சார்பில் 11 கல்லுாரிகளில் மாலை நேர வகுப்புகள் துவங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.மாலை நேர இளநிலை பட்டப்படிப்பு வகுப்புகள் துவக்கப்படும் கல்லுாரிகள் மாலைநேர கல்லுாரிகளாகவும் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுகிறது.புதிய கல்விகொள்கையின் அடிப்படையில், தொழில் சார்ந்த கல்வியை ஊக்குவிக்கும் வகையில், புதிதாக துவக்கப்படும் வகுப்புகளில் பாடப்பிரிவுகள் இருக்க வேண்டுமென மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.உயர்கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்தாண்டு பட்ஜெட்டில் மாலை நேர கல்லுாரிகள் துவங்குவதற்கு கடிதம் வைக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் தான் இது சாத்தியமாகியுள்ளது. மாலை நேர வகுப்புகள் மாணவர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும். பி.காம்., - பி.சி.ஏ., உட்பட சில தொழில் சார்ந்த பாடப்பிரிவுகள் மாலைநேர வகுப்புகளில் சேர்க்கப்பட உள்ளன.பெங்களூரு, பெலகாவி, துமகூரு, மைசூரு, ஷிவமொகா, தாவங்கரே, தார்வாட், விஜயபுரா, மங்களூரு, கலபுரகி, பல்லாரி உள்ளிட்ட 11 மாநகரங்களில் உள்ள அரசு கலைக்கல்லுாரிகளில் மாலை நேர வகுப்புகள் துவக்கப்படுகின்றன.மாலை நேர வகுப்பு கல்லுாரிக்கு என தனியாக முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X