போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஊழியர்களில் சிலர், பணி நீக்கம் | Dinamalar

போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஊழியர்களில் சிலர், பணி நீக்கம்

Added : ஆக 26, 2021 | |
பெங்களூரு-போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஊழியர்களில் சிலர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை திரும்ப பெறும்படி, ஊழியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நடப்பாண்டு ஏப்ரலில், கர்நாடக போக்குவரத்துக்கழக ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர். கொரோனா நேரத்தில் போராட்டம் நடத்த வேண்டாம். கை

பெங்களூரு-போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஊழியர்களில் சிலர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை திரும்ப பெறும்படி, ஊழியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நடப்பாண்டு ஏப்ரலில், கர்நாடக போக்குவரத்துக்கழக ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர். கொரோனா நேரத்தில் போராட்டம் நடத்த வேண்டாம். கை விடும்படி மாநில அரசு அறிவுறுத்தியும், ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.எனவே, போக்குவரத்துக்கழகத்தின், 2,109 பயிற்சி ஊழியர்களை, போக்குவரத்துத்துறை பணி நீக்கம் செய்தது. 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை, தொலைவில் உள்ள இடங்களுக்கு, இடம் மாற்றியது.பெங்களூரின் ஆர்.டி.நகரில், முதல்வர் பசவராஜ் பொம்மை இல்லத்துக்கு சென்ற போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தலைவர் சந்திர சேகர் தலைமையிலான குழுவினர், பணி நீக்க உத்தரவை திரும்ப பெறும்படி, முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X