சட்ட விரோதமாக பொருத்தியுள்ள கேபிள்களை அகற்ற, பெங்களூரு மாநகராட்சி ஒரு மாதம் கெடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சட்ட விரோதமாக பொருத்தியுள்ள கேபிள்களை அகற்ற, பெங்களூரு மாநகராட்சி ஒரு மாதம் கெடு

Added : ஆக 26, 2021
Share
பெங்களூரு-பெங்களூரில் நடைபாதை, சாலையோர மரங்கள், மின் கம்பங்கள் மீது சட்ட விரோதமாக பொருத்தியுள்ள கேபிள்களை அகற்ற, பெங்களூரு மாநகராட்சி ஒரு மாதம் கெடு விதித்துள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:பெங்களூரின் பல இடங்களில், சட்ட விரோதமாக பல விதமான கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும்படி, கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு-பெங்களூரில் நடைபாதை, சாலையோர மரங்கள், மின் கம்பங்கள் மீது சட்ட விரோதமாக பொருத்தியுள்ள கேபிள்களை அகற்ற, பெங்களூரு மாநகராட்சி ஒரு மாதம் கெடு விதித்துள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:பெங்களூரின் பல இடங்களில், சட்ட விரோதமாக பல விதமான கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும்படி, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி, கேபிள்களை அப்புறப்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, மின் கம்பங்கள், சாலையோர மரங்கள், நடைபாதை போன்ற இடங்களில் கேபிள்களை ஒரு மாதத்துக்குள், கேபிள் நிறுவனங்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X