மைசூரு மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது; காங்., - ம.ஜ.த., மோதலால் கிடைத்தது வாய்ப்பு

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
மைசூரு : மைசூரு மாநகராட்சியின் புதிய மேயராக பா.ஜ.,வின் சுனந்தா பாலநேத்ரா நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், பா.ஜ., முதல் முறையாக மைசூரு மாநகராட்சியை கைப்பற்றி புதிய அத்தியாயம் படைத்துள்ளது.கடந்த ஆண்டு ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி, மைசூரு மாநகராட்சியை கைப்பற்றியது. ஆனால், தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் போலி சொத்து விவரம் தாக்கல்
BJP, Mysuru Mayor, Karnataka

மைசூரு : மைசூரு மாநகராட்சியின் புதிய மேயராக பா.ஜ.,வின் சுனந்தா பாலநேத்ரா நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், பா.ஜ., முதல் முறையாக மைசூரு மாநகராட்சியை கைப்பற்றி புதிய அத்தியாயம் படைத்துள்ளது.

கடந்த ஆண்டு ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி, மைசூரு மாநகராட்சியை கைப்பற்றியது. ஆனால், தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் போலி சொத்து விவரம் தாக்கல் செய்யப்பட்டதால், மேயராக இருந்த ம.ஜ.த.,வின் ருக்மினி மாதே கவுடாவின் பதவி பறிக்கப்பட்டது. காலியான மேயர் பதவிக்கு, மைசூரு மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் நேற்று தேர்தல் நடந்தது.

மைசூரு மாநகராட்சியின் மொத்த பலம் 65. இதில், ருக்மினி மாதே கவுடா பதவி இழந்ததால், கவுன்சிலர்களின் எண்ணிக்கை, 64 ஆக குறைந்தது. இத்துடன், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் - எம்.எல்.சி.,க்கள் எட்டு பேர் சேர்த்து, 72 பேர் நேற்று ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். பா.ஜ.,வின் பலம், 22 கவுன்சிலர்கள், எம்.பி., இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் என 25 பேராக இருந்தது. காங்கிரசில், 19 கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., என 20 பேர்; ம.ஜ.த.,வில், 17 கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., மூன்று எம்.எல்.சி.,க்கள் என 21 பேர் இருந்தனர்.

மேலும், ஐந்து சுயேச்சை கவுன்சிலர்களில், இருவர் ம.ஜ.த.,வுக்கும், ஒருவர் பா.ஜ.,வுக்கும் ஆதரவாளர்களாக இருந்தனர். ஒருவர் பி.எஸ்.பி., கட்சிக்கு ஆதரவாக இருந்தார். இன்னொருவர் வரவில்லை. மண்டல கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் தேர்தல் நடைமுறைகளை நடத்தினார். பா.ஜ.,வின் சுனந்தா பாலநேத்ரா, காங்கிரசின் சாந்தகுமார், அஸ்வினி அனந்த் ஆகியோர் மேயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.


latest tamil news



மேயர் பதவி வழங்குவதில் இழுபறி நீடித்ததால், ம.ஜ.த., திடீரென காங்கிரசுடனான கூட்டணியை, முறித்து கொண்டது. இறுதியில், பா.ஜ.,வின் சுனந்தா பாலநேத்ரா, 26 ஓட்டுகள் பெற்றதால், அவர் மைசூரின் புதிய மேயர் என தேர்தல் அதிகாரி பிரகாஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதன் மூலம், மைசூரு மாநகராட்சியின், 38 கால வரலாற்றில், பா.ஜ., அதை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், ம.ஜ.த., சண்டை மூலம் பா.ஜ., லாபம் அடைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
26-ஆக-202114:10:39 IST Report Abuse
Ramaraj P EVM
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
26-ஆக-202114:05:25 IST Report Abuse
Ganesh ஜெய்ஹிந்த். இப்படியே கொஞ்ச கொஞ்சமாக எல்லா இடத்திலும் பாஜக வந்துவிடும் போலிருக்கே.நேர்மையான ஒரு கட்சி தமிழகத்திலும் ஊடுவியிருக்கிறது ஆச்சரியம் தானே
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
26-ஆக-202113:29:27 IST Report Abuse
Vena Suna காங்கிரஸ் இனி வரலாறு தான். வாரிசு அரசியல் எல்லாமே அப்படி தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X