பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஏ... நானும் டெல்லிக்கு போறேன்!போக்குவரத்து துறை தான் நஷ்டத்தில், கஷ்டத்தில் இருக்குதாம். இந்த துறையில் 1,121 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதால், எப்புடி மீளுவதுன்னு மினிஸ்டர் தத்தளிக்கிறதா சொல்லி குழப்பத்தில் இருக்கிறாரு.சென்ட்ரல் கவர்மென்ட்டோட நிதியுதவி கேட்டு இவரும் டெல்லிக்கு போக போறாராம். எது ஒண்ணுக்கும் டெல்லிக்கு ஓடனும்னு மினிஸ்டர்கள் முடிவெடுத்துக்குறாங்க.

ஏ... நானும் டெல்லிக்கு போறேன்!போக்குவரத்து துறை தான் நஷ்டத்தில், கஷ்டத்தில் இருக்குதாம். இந்த துறையில் 1,121 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதால், எப்புடி மீளுவதுன்னு மினிஸ்டர் தத்தளிக்கிறதா சொல்லி குழப்பத்தில் இருக்கிறாரு.சென்ட்ரல் கவர்மென்ட்டோட நிதியுதவி கேட்டு இவரும் டெல்லிக்கு போக போறாராம். எது ஒண்ணுக்கும் டெல்லிக்கு ஓடனும்னு மினிஸ்டர்கள் முடிவெடுத்துக்குறாங்க. மாநிலத்தோட 'பவர்' முதல்வரிடம் இருந்தாலும், டெல்லியை நம்பி தான் இவர்களோடு இன்ஜின் வேலை செய்யிதாம். அதனால், போக்குவரத்துக்காரர் நானும் டெல்லிக்கு போறேன் என்கிறார்.கையில் சிக்கிய புல்லுக்கட்டு!'மாஜி' பிரதமரோட பேர்ல ஜி.டி. இன்ஷியலா இருக்கிற கவுடா, புல்லுக்கட்டு கட்சியில் மந்திரியா இருந்தவரு. சில காலமாவே, அந்த கட்சியில் மட்டும் படாமல், ஒட்டும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்தார்.இவர், அந்த புல்லுக்கட்டை தலையில் தூக்கி வைத்துக் கொள்ள விரும்பாமல், கை கட்சியில் சேருவது உறுதி ஆகிவிட்டது.இவரோட மகனுக்கு ஹுன்சூரு அல்லது சாமுண்டீஸ்வரி தொகுதிகளில், 'சீட்' தருவதாக கை காரங்க ஒப்பந்தம் செய்திருக்காங்க. இது, 'ஓகே' ஆயிடுச்சாம்!ஒதுங்கியவர் ஒத்துப் போனார்!பல்லாரியை உடைத்து, விஜயநகரை மாவட்டமாக ஆக்கின மந்திரி, தனக்கு ஒதுக்கின டூரிஸ்ட் துறை பிடிக்கலன்னு டில்லி வரைக்கும் முட்டிப் பார்த்தார்; எதுவும் அசையல.முதல்வரை சந்தித்து முறையிட்டு பார்த்தும் பலன் கிடைக்காமல் போனதால், மாற்று வழியில்லாமல் ஒத்துப் போய், அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில், துறை மாற்றி தருமாறு கேட்டு திரும்பி வந்துவிட்டாராம்.எடிஜி உறவினர் மேயர்!மாலத்தீவுக்கு ரெஸ்ட் எடுக்க போன மாஜி பூக்கார சி.எம்., அங்கு அடுத்த கட்ட அரசியல் வேலையை கவனிக்க யோசிச்சாரு. வந்த உடனே, மைசூரு மேயரா தமது உறவினரை பதவி ஏற்க செய்திட்டாரு.மைசூரிலும் தாமரை மலர் வைத்ததால், கைக்காரங்களால் தாங்கிக்க முடியல. பூக்காரங்களோடு புல்லுக்கட்டுக்காரங்க கூட்டணி, கை காரங்க வயிற்றில் புளியை கரைத்துள்ளது.இக்கூட்டணி அடுத்தக்கட்ட தேர்தல்களிலும் தொடர வாய்ப்பு இருக்குதாம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X