பொது செய்தி

இந்தியா

செக் போஸ்ட்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
தேர்தல் சடுகுடு ஆட்டம்சாம்பியன், 'பி' பிளாக் துவங்கி, பிக்கிட் லைன் சி,இ,டி தெலுங்கு லைன்கள் உள்ளிட்ட 12-வது வார்டு எலக் ஷன் நடப்பதாலே, செப்டம்பர் 3 வரைக்கும் ஓட்டு இருப்பவங்களுக்கு ஜாலியோ ஜாலி.இதுக்கு முன் இந்த வார்டில் ஓட்டுக்கேட்டு, ஒட்டு உறவு இல்லாதவங்களும் தாராளமா தரிசனம் தராங்க.காலாகாலமாக கொடி கட்டி பறந்த செங்கொடி, நீலக் கொடிக்காரங்களோட கட்சி போட்டியில்

தேர்தல் சடுகுடு ஆட்டம்சாம்பியன், 'பி' பிளாக் துவங்கி, பிக்கிட் லைன் சி,இ,டி தெலுங்கு லைன்கள் உள்ளிட்ட 12-வது வார்டு எலக் ஷன் நடப்பதாலே, செப்டம்பர் 3 வரைக்கும் ஓட்டு இருப்பவங்களுக்கு ஜாலியோ ஜாலி.இதுக்கு முன் இந்த வார்டில் ஓட்டுக்கேட்டு, ஒட்டு உறவு இல்லாதவங்களும் தாராளமா தரிசனம் தராங்க.காலாகாலமாக கொடி கட்டி பறந்த செங்கொடி, நீலக் கொடிக்காரங்களோட கட்சி போட்டியில் இல்லாததால் நம்ம நிலை இப்புடி ஆயிடுச்சேன்னு சோர்ந்து போயிருக்காங்க.பழைய ரெட்டை இலை, புல்லுக்கட்டு, கூட்டமெல்லாம், புது உறவை தேடிக்கிட்டாங்க. 6 வேட்பாளர்களுமே சம பலமா இருக்கிறாங்க. இவங்க சடுகுடு ஆட்டம் தொடங்கிட்டாங்க.வாரி தருவாரா வள்ளல்!நகராட்சி தலைவரு ஆபிசில் இதுவரை இல்லாத கூத்து நடக்குது. போனவாரம், காட்டேரி அம்மன் பேர்ல ஒரு பெண், மருள் வந்ததா ஆட்டம் போட்டார். போதும் வெளியேறும்மான்னு அனுப்பி ஓட்டினாங்க.நேற்று, மாரியம்மா வந்திருப்பதாக சடை முடியோடு ஒரு தாயம்மா மருள் வந்து ஆடினாங்க. வந்தவரை சும்மா அனுப்ப மனசு இல்லாதவர் தட்சணை கொடுத்து அனுப்பி வைத்தார்.இதை கவனிச்ச ஒரு, 'குடி'மகன், தன்னையும் கவனி தலைவான்னு நெடுக்க காலில் விழுந்து கும்பிட்டு போட்டார். தலைவரோட ஆபிசுக்குள் மக்கள் பிரச்னை சொல்றாப்ல சேட்டைகளும் ஜாஸ்தி ஆயிடுச்சு.வள்ளல்னு பேரு இருக்கிறதாலே வாரி கொடுப்பாருன்னு சிக்கலை தராங்க. இதுக்கு முடிவுகட்டனும்னு ஊழியர்கள் பேசிக்கிறாங்க.'ஒன் சைடு' சப்போர்ட்!நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடை ஒண்ணு பத்து வருஷமா பூட்டி வெச்சிருந்தாங்க. கடையோட வாடகையாளர் காலமாகி 10 வருஷம் கடந்து போச்சாம். வாடகையும் யாரும் செலுத்த வில்லையாம். யாரும் உரிமையும் கொண்டாட வில்லை.இதனை நகராட்சி உறுப்பினர் ஒருத்தர் ஷட்டர் டோரை திறந்து பழுது பார்க்கும் வேலையை தொடங்கினாராம்.உடனே இது ஒரு கட்சியோடு ஆபிஸ் என்றும், பால் பண்ணை கடை என்றும், இதை, சட்ட விரோதமாக பூட்டை உடைச்சு உள்ளே நுழைஞ்சிட்டதா காவல் துறை க்கு புகார் ஒண்ணு போயிருக்கு.காக்கிகாரங்க நகராட்சி உறுப்பினரை கைது செய்தாங்க. இதனால் அவர் தீர விசாரிக்காமல் 'ஒன் சைடு' சப்போர்ட்டா வழக்கு பதிவு செய்திட்டாங்கன்னு காக்கி மீது குற்றம் சாட்டி இருக்கிறாரு. நீதிமன்றத்தில் நியாயம் கேட்க போறாராம்.இன்னும் அடங்கலையே!மனித உரிமைச் சங்கத்தை சேர்ந்த தன்னார்வ பெண் ஒருவரை தரக்குறைவா, கீழ்த்தரமா செல்போன் செய்திக்காரர் பேசியதா, காவல் நிலைய பெர்ர்ய ஆபிசர் இடத்தில் கம்ப்ளைன்ட் போயிருக்கு.என்னனு அவமானப்படுத்தினார் என்ற விபரத்தை ஆபிசர்களிடத்தில் தெரிவிச்சதாலே, விசாரணை நடத்துறாங்க. ஏற்கனவே கலவரத்தை துாண்டும் வகையில் விஷமத்தை பரப்பினதற்கு ஸ்ட்ராங்கா வழக்கு பதிவாச்சு.இதனால், தலைமறைவாக இருந்து கீழ் கோர்ட்டில் ஜாமின் கிடைக்காமல், மேல் கோர்ட்டை ஏறினவரு, இப்போ பெண்ணை அவமானப் படுத்தியதா வழக்கில் சிக்கி இருக்காரு!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X