பொது செய்தி

இந்தியா

பெங்களூரில் தனியார் கலையரங்கங்கள் திறக்கப்பு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரில் தனியார் கலையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், ரவீந்திர கலாஷேத்ரா எப்போது திறக்கும் என, நாடகக்குழுக்கள் கேள்வி எழுப்புகின்றன. பெங்களூரில் கொரோனா துவங்கியதால், கலையரங்கங்கள் மூடப்பட்டன. நகரில் கொரோனா தொற்று குறைந்ததால், பெரும்பாலானவை திறக்க நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. தினமும் இரவு 9:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை, அவசர நேரத்தை தவிர. மற்ற

பெங்களூரு-பெங்களூரில் தனியார் கலையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், ரவீந்திர கலாஷேத்ரா எப்போது திறக்கும் என, நாடகக்குழுக்கள் கேள்வி எழுப்புகின்றன. பெங்களூரில் கொரோனா துவங்கியதால், கலையரங்கங்கள் மூடப்பட்டன. நகரில் கொரோனா தொற்று குறைந்ததால், பெரும்பாலானவை திறக்க நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. தினமும் இரவு 9:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை, அவசர நேரத்தை தவிர. மற்ற செயல்பாடுகளுக்கு தடையுள்ளது.கலையரங்கம் எனவே இரவு 7:00 மணிக்குள், முடியும் வகையில் திட்டம் வகுத்து, நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தனியார் கலையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளது. நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. நகரின் முக்கிய கலையரங்களின் பட்டியலில் உள்ள ரங்கசங்கரா, ஏ.டி.ஏ., கலையரங்கம், டி.வி.ஜி., கலையரங்கங்களில், கலை, கலாசார நிகழ்ச்சிகள், நாடகங்கள் துவங்கப்பட்டுள்ளன.ஆனால் அரசு சார்ந்த, ரவீந்திர கலாஷேத்ரா, நயனா கலையரங்கம், நாகரபாவி அருகிலுள்ள கலா கிராமம் கலையரங்கங்கள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இம்மூன்று கலையரங்கங்கள், கன்னடம், கலாசாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.நாடகக்குழுவினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ரவீந்திர கலாஷேத்ரா, கலா கிராமம் கலையரங்குகளில் நிகழ்ச்சி நடத்த ஆர்வம் காண்பிக்கின்றனர். கலா கிராமம் கலையரங்கத்தில், தீயணைப்பு வசதி, நவீனப்படுத்தும் பணிகளுக்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன், தற்காலிகமாக மூடப்பட்டது; இதுவரை திறக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்ய, இத்தனை ஆண்டுகள் தேவையா என கேள்வி எழுந்துள்ளது.ரவீந்திரா கலாஷேத்ரா, கலா கிராமம் கலையங்குகளில், விசாலமான மேடை உள்ளது. நிழல், விளக்கு வசதி உள்ளது. அது மட்டுமின்றி கட்டணமும் கூட, கைக்கெட்டும் வகையில் உள்ளது.கலா கிராமம் அரங்கத்தில், காலை நேரத்தில் நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடத்த 3,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதியம் முதல், இரவு 10:00 மணிவரை நிகழ்ச்சி நடத்த, இதே கட்டணம் உள்ளது. ரவீந்திர கலாஷேத்ராவில், காலை நேரத்தில், 5,500 ரூபாய், மாலையிலும் இதே தொகை உள்ளது.முன் பதிவு குறைந்த கட்டணம் வசூலிப்பதால், நாடகக்குழுவினருக்கு உதவியாக உள்ளது. அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவதாக இருந்தால், ரவீந்திர கலாஷேத்ராவை முன் பதிவு செய்வர். இங்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்பர்.தனியார் கலையரங்கங்களில், கட்டணம் மிகவும் அதிகம் என்பதால், நாடகக்குழுவினர் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கலைஞர்களும் கூட வருத்தமடைந்துள்ளனர். அரசு சார்ந்த கலையரங்கங்களை, விரைவில் திறக்கும்படி, கன்னடம், கலாசாரத்துறை அமைச்சர் சுனில்குமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ரவீந்திர கலாஷேத்ரா, கலா மந்திர் நிர்வாக அதிகாரி நாகேந்திர சாமி கூறியதாவது:நாங்கள் அரசிடம், ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளோம். கலா கிராமம் கலையரங்கம், முழுமையாக நவீனப்படுத்தப்பட்டது. அரசு அனுமதியளித்த பின், அரங்கத்தை திறந்து, நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பளிப்போம்.பெங்களுரு மக்கள், கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளிக்கின்றனர். சிறப்பான நாடகங்கள், கிராமிய கலை, கலாசார நிகழ்ச்சிகள் வெற்றியடைகின்றன.அனைத்து அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட துவங்கியுள்ளது. கலைக்குழுக்களின் நலனுக்காக, குறைந்த கட்டணம் உள்ள, அரசு கலையரங்கங்கள் துவங்கப்படுவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X