சாமுண்டி மலை அடிவாரத்தில், எம்.பி.ஏ., படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மைசூரு-மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில், எம்.பி.ஏ., படிக்கும் மாணவியை, மர்ம நபர்கள் கும்பலாக கற்பழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது, கர்நாடகாவையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.மைசூரு நகரின் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாபுரத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், எம்.பி.ஏ., படிக்கும் மாணவி, தனது நண்பருடன் நேற்று முன்தினம் மாலை பேசிக் கொண்டிருந்தார்.இருவரும் அருகருகே

மைசூரு-மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில், எம்.பி.ஏ., படிக்கும் மாணவியை, மர்ம நபர்கள் கும்பலாக கற்பழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது, கர்நாடகாவையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.மைசூரு நகரின் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாபுரத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், எம்.பி.ஏ., படிக்கும் மாணவி, தனது நண்பருடன் நேற்று முன்தினம் மாலை பேசிக் கொண்டிருந்தார்.இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டு பேசி கொண்டிருந்த போது, இரவு 7:30 மணிக்கு, ஆறு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. ஆண் நண்பரை சரமாரியாக தாக்கிவிட்டு, அவர் முன்னிலையில், மாணவியை இழுத்துச் சென்று, கும்பலாக கற்பழித்தது.அந்த மாணவியின் கதறலை, அந்த கொடூர கும்பல் பொருட்படுத்தவே இல்லை. தொடர்ந்து பலாத்காரத்திற்கு ஆளானதால், அந்த பெண் துவண்டு விழுந்து விட்டாள். அவர் இறந்து விட்டார் என கருதி, அந்த கும்பல், தன் வேலையை முடித்த பின் தப்பியோடி விட்டது.அந்த வன்முறை கும்பலின் தாக்குதலால் நினைவிழந்து கிடந்த இருவரும், சிறிது நேரம் கழித்து சுயநினைவுக்கு வந்து, சுதாரித்து எழுந்து, அபய குரல் கொடுத்தனர்.அதை கேட்ட, அப்பகுதிக்கு வந்த சிலர், இந்த காதல் ஜோடியை இரவு 10:30 மணிக்கு, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.நேற்று காலை இந்த கொடூரம், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். காம கொடூரன்கள் மது அருந்தி விட்டு கற்பழிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, அந்த கொடூரன்கள் தேடப்படுகின்றனர். எனினும், அந்த மாணவியின் ஆண் நண்பர் முன்னுக்கு பின்னாக பதிலளிப்பதால், அவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.இச்சம்பவம் குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை டில்லியில் நேற்று கூறியதாவது:மைசூரு கூட்டு கற்பழிப்பு சம்பவம் குறித்து மாணவியிடம் தகவல் பெறப்பட்டுள்ளது. அதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மைசூரு ஆலனஹள்ளி காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X