பொது செய்தி

இந்தியா

ஆதரவாக இருக்க வேண்டிய வயதில், முதிய தம்பதி விவாகரத்து கோருகின்றனர்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
பெங்களூரு-ஒன்றாக சேர்ந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய வயதில், முதிய தம்பதி விவாகரத்து கோரி, நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டுள்ளனர். மனைவி 4 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.பெங்களூரு பசவனகுடியில் வசிக்கும் தொழிலதிபர் கிருஷ்ணா, 65. இவர் மஹாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த சாதனா, 60, என்பவரை 1984ல் திருமணம் செய்து

பெங்களூரு-ஒன்றாக சேர்ந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய வயதில், முதிய தம்பதி விவாகரத்து கோரி, நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டுள்ளனர். மனைவி 4 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.பெங்களூரு பசவனகுடியில் வசிக்கும் தொழிலதிபர் கிருஷ்ணா, 65. இவர் மஹாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த சாதனா, 60, என்பவரை 1984ல் திருமணம் செய்து கொண்டார்.தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நான்கு ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்கின்றனர். இருவரும் விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.ஜீவனாம்சம் கேட்டு, மஹாராஷ்டிராவின் ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில், சாதனா வழக்கு தொடர்ந்துள்ளார். அது மட்டுமின்றி பெங்களூரின் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், கணவரின் சொத்தில் பங்கு கேட்டு, மற்றொரு வழக்கும் தொடர்ந்துள்ளனர். வயதான காலத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என, பலரும் புத்திமதி கூறியும், சாதனா பொருட்படுத்தவில்லை. இத்தனை வழக்குகள் தொடர்பாக, நீதிமன்றத்துக்கு அலைய முடியாத கணவர், மனைவியுடன் சமரசம் செய்துகொள்ள முடிவு செய்தார். தனக்கு நான்கு கோடி ரூபாய் கொடுத்தால், வழக்குகளை திரும்ப பெறுவதாக, மனைவி கூறினார். இது பற்றி நீதிமன்றத்துக்கும் தகவல் கூறினார்.இதன்படி கிருஷ்ணா, வங்கி மூலம் இரண்டு முறை, தலா இரண்டு கோடி ரூபாயை, மனைவிக்கு கொடுத்தார். ஆனால் சாதனா சொன்னபடி, வழக்கை திரும்பப் பெறவில்லை. ஆகஸ்ட் 19ல் அவர் நீதிமன்றத்துக்கு வந்து, கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அவர் வரவில்லை.தன்னிடம் 4 கோடி ரூபாய் பெற்று, மோசடி செய்ததாக பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையத்தில், சாதனா மீது கணவர் கிருஷ்ணா புகார் அளித்துள்ளார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X