சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பை அகற்றும் லாரி மாதவரத்தில் தீக்கிரை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மாதவரம்-மாதவரத்தில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்ட லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில், லாரி முழுதும் எரிந்து நாசமானது. சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், மஞ்சம்பக்கம் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில் குப்பை அகற்றிய ஒப்பந்த லாரி, அதை கொடுங்கையூர் கிடங்கிற்கு கொண்டு சென்றது.லாரியை, மீஞ்சூர் அத்திப்பட்டைச் சேர்ந்த சரவணன், 35, என்பவர் ஓட்டினார். அவருடன்,

மாதவரம்-மாதவரத்தில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்ட லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில், லாரி முழுதும் எரிந்து நாசமானது. சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், மஞ்சம்பக்கம் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில் குப்பை அகற்றிய ஒப்பந்த லாரி, அதை கொடுங்கையூர் கிடங்கிற்கு கொண்டு சென்றது.லாரியை, மீஞ்சூர் அத்திப்பட்டைச் சேர்ந்த சரவணன், 35, என்பவர் ஓட்டினார். அவருடன், துாய்மை பணியாளர்கள் முனிரத்தினம், பாலு ஆகியோர் இருந்தனர்.மாதவரம், தபால் பெட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, லாரியின் பக்கவாட்டில் தீப்பிடித்து எரிந்தது. அதைக் கண்ட ஓட்டுனர், லாரியை சாலையோரம் நிறுத்தி, துாய்மை பணியாளர்களுடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றார்.ஆனால், தீ வேகமாக பரவி, லாரி முழுமையாக எரிந்தது. தகவலறிந்த மாதவரம் போலீசார், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.நள்ளிரவு என்பதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரி பாகங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X