இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைதுவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார், 30; இவர் தந்தை ஏழுமலை பெயரில் 4 ஏக்கர் நிலம் வாங்கினார். அதை, பட்டா மாற்றம் செய்வதற்காக, தைலாபுரம் வி.ஏ.ஓ., ராஜு, 59 என்பவரிடம் விண்ணப்பித்தார். அவர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.உத்திரகுமார்,
Crime, Murder, arrest


தமிழக நிகழ்வுகள்




ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது



விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார், 30; இவர் தந்தை ஏழுமலை பெயரில் 4 ஏக்கர் நிலம் வாங்கினார். அதை, பட்டா மாற்றம் செய்வதற்காக, தைலாபுரம் வி.ஏ.ஓ., ராஜு, 59 என்பவரிடம் விண்ணப்பித்தார். அவர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.உத்திரகுமார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று மதியம் 2:30 மணியளவில் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ராஜுவிடம் 20 ஆயிரம் ரூபாயை உத்திரகுமார் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ராஜுவை கைது செய்தனர்.


மனைவியை கொன்ற கணவர் கைது



திருப்பூர் மாவட்டம், அவிநாசி காமராஜர் வீதியை சேர்ந்தவர், விஜய், 35; பின்னலாடை நிறுவன ஊழியர். நேற்றுமுன்தினம் மதியம், இவரது மனைவி பிரியா, 30, வீட்டில் ரத்த காயங்களுடன் கொல்லப்பட்டு கிடந்தார். அவிநாசி போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் விஜய் தான் பிரியாவை கொன்றது தெரியவந்தது.


காதலனுடன் சேர்ந்து கொழுந்தனை கொலை செய்த அண்ணி கைது



ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு அருகே கொடைக்கான்வலசை கிராமத்தை சேர்ந்த முத்து மகன் ராஜேந்திரன் 29. இவரது மனைவி பூமாதேவி 28. திருமணமாகி குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாக உள்ளார். ராஜேந்திரன் அண்ணன் செல்வம் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி சத்யா 35. இவர்களுக்கு இரண்டு

பெண் குழந்தைகள் உள்ளனர். அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் ராஜேந்திரன் சத்யாவிற்கு உதவி செய்து வந்தார். அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. ஊரார் கண்டித்ததால் சத்யா ஏர்வாடியை சேர்ந்த வேறு சிலருடன் பழகினார். இதை ராஜேந்திரன் கண்டித்தார். இதனால் சத்யாவுக்கும், ராஜேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரத்தில் ஒருவரிடம் பணம் வாங்க வேண்டும் என ராஜேந்திரனை சத்யா அழைத்தார். ராஜேந்திரன் டூவீலரில் சத்யாவை அழைத்து வந்தார். இரவு 9:30 மணிக்கு ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்றனர். அப்போது டூவீலரை நிறுத்த சொல்லி இறங்கிய சத்யா அலைபேசியில் சற்று தள்ளி நின்று பேசினார்.அங்கு இருட்டில் மறைந்திருந்த இருவர் ராஜேந்திரனை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர்.


'டிக்டாக்' பெண் பிரபலத்தின் தற்கொலை நாடகம் அம்பலம்



திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்தி நகரில் வசிப்பவர் சூர்யா தேவி, 35. கணவரை பிரிந்து, மகள், மகனுடன் வசித்து வருகிறார். டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர்.சமீபத்தில், தன் ஆண் நண்பர் சிக்கந்தர் என்பவரை செருப்பால் அடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதுகுறித்த புகாரில், மதுரை போலீசார், சூர்யாதேவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, மதுரை போலீஸ் கமிஷனருக்கு வீடியோ ஒன்றை சூர்யா தேவி அனுப்பினார். அதில், மிகுந்த மன உளைச்சல் காரணமான தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அழுது கொண்டே கூறி இருந்தார்.போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மணப்பாறை டி.எஸ்.பி., பிருந்தாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் இரவு 12:00 மணிக்கு மேல் சூர்யாதேவி வீட்டுக்கு சென்றபோது, உள்பக்கம் தாழிட்டிருந்தது.

கதவை தட்டியும் திறக்காததால், தீயணைப்பு படையினர் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அங்கு, கட்டிலில் சூர்யாதேவி படுத்து இருந்துள்ளார். சீலிங் பேனில் வேட்டி ஒன்று தொங்க விடப்பட்டிருந்தது. வீடியோ அனுப்பியது குறித்து விசாரித்தபோது, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சூர்யாதேவி கூறி உள்ளார்.அவருக்கு அறிவுரை கூறி, சூர்யாதேவி, அவரது மகன், மகள் ஆகியோரை, அருகில் உள்ள அவரது தந்தை சாமி வீட்டில் ஒப்படைத்து, போலீசார் சென்றனர். நண்பரை செருப்பால் அடித்த வழக்கில் இருந்து தப்பிக்கவே, சூர்யாதேவி தற்கொலை நாடகம் ஆடியதாக கூறப்படுகிறது.


மின்சாரம் தாக்கி சிறுவன் பலி



வேலுார்: வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே முள்ளுவாடி மலையைச் சேர்ந்தவர் நீலமேகம், 56; மகன் பூவரசன், 13. அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களோடு, பங்களாமேடு உமையம்பட்டு மலையடிவாரத்திற்கு நேற்று முன்தினம் சென்று, உண்டி வில்லால் அணிலை அடித்து பிடிக்க முயன்று கொண்டிருந்தார்.அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பூவரசன், சம்பவ இடத்திலேயே இறந்தார். பயத்தில், அவருடன் சென்ற மூன்று சிறுவர்கள் மாயமாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


பயங்கரவாதிகள் ஊடுருவலா?



ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து எட்டு பேர் வேதாரண்யம் பகுதியிலும், மூன்று பேர் தொண்டியிலும் கடல் வழியாக ஊடுருவியதாக உளவு பிரிவிலிருந்து தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் எஸ்.பி., கார்த்திக் தலைமையில் தனிப்படையினர், ராமநாதபுரம் கியூ பிரிவு, தேவிபட்டினம் மரைன் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து, எஸ்.பி. பட்டனம் முதல் தேவிபட்டினம் வரை இரவு முழுதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையோர மீனவ கிராமங்களில் விசாரித்தனர்.


latest tamil news





இந்திய நிகழ்வுகள்




மைசூரில் மாணவி பலாத்காரம்



மைசூரு,:மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில், எம்.பி.ஏ., படிக்கும் மாணவியை, மர்ம நபர்கள் கும்பலாக கற்பழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது, கர்நாடகாவையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


மனைவியின் சிதையில் பாய்ந்த முதியவர்



பட்னா: ஒடிசாவின் பவானிபட்னா மாவட்டம் கோலமுண்டா பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் நிலாமணி சபர், 65. இவரது மனைவி ராய்பாரி, 60, இறந்ததால் நேற்று இறுதிச்சடங்குகள் நடந்தன.அவரது உடலுக்கு தீயூட்டிய பின், மகன்கள் மற்றும் உறவினர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது மனைவி இறந்த சோகம் தாளாத நிலாமணி, எரிந்த சிதையில் பாய்ந்ததால் உடல் கருகி பலியானார்.


மிக்-21 ரக விமானம் விபத்து



ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்- 21 பைசன் ரக போர் விமானம், விழுந்து நொறுங்கியது. இதில் சிறுகாயங்களுடன் விமானி உயிர் தப்பினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X