பொது செய்தி

தமிழ்நாடு

காசிமேடு சுடுகாடில் 'பயோ காஸ்' தகன மேடை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
காசிமேடு--காசிமேடு சுடுகாடில், புதிதாக 34 லட்சம் ரூபாய் செலவில், 'பயோ காஸ்' தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.சென்னை, காசிமேடு, சூரியநாராயண தெருவில் 20 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இதில், காசிமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தினமும் 10க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டுவதற்காக கொண்டு வரப்படுகின்றன.இங்கு ஏற்கனவே ஒரு பயோ

காசிமேடு--காசிமேடு சுடுகாடில், புதிதாக 34 லட்சம் ரூபாய் செலவில், 'பயோ காஸ்' தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.சென்னை, காசிமேடு, சூரியநாராயண தெருவில் 20 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இதில், காசிமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தினமும் 10க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டுவதற்காக கொண்டு வரப்படுகின்றன.இங்கு ஏற்கனவே ஒரு பயோ காஸ் தகன மேடை உள்ளது. தற்போது, கொரோனா காலகட்டத்தில் அதிக அளவிலான உடல்கள் எரியூட்டப்பட்டன. இதனால், உடல்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து, இதை தவிர்க்க தற்போது புதிதாக 34 லட்சம் ரூபாய் செலவில் பயோ காஸ் தகன மேடையை, தண்டையார்பேட்டை மாநகராட்சி அதிகாரிகள் அமைத்துள்ளனர். இதன் மூலம் தினமும் 10க்கும் மேற்பட்ட உடல்களை எரிக்க முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X