மேகதாது அணை விவகாரம்: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருடன் கர்நாடகா முதல்வர் சந்திப்பு

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: மேகதாது அணை திட்டத்துக்கு விரைவில் அனுமதி தரும்படி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று டில்லியில் ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து வலியுறுத்தினார்.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
Mekedatu, Karnataka CM, Basavaraj Bommai

புதுடில்லி: மேகதாது அணை திட்டத்துக்கு விரைவில் அனுமதி தரும்படி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று டில்லியில் ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து வலியுறுத்தினார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பெங்களூரு குடிநீருக்காகவும், மின்சாரம் உற்பத்திக்காகவும் அணை கட்டுவதாக கர்நாடகா கூறுகிறது.

ஆனால், இத்திட்டத்தால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பிருப்பதால், அணை கட்ட கூடாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதை மீறி அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா, விடாபிடியாக உள்ளது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, நேற்று டில்லி சென்ற முதல்வர் பசவராஜ் பொம்மை, ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.


latest tamil news



அப்போது, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரைவில் அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதற்கிடையே, மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு குறித்து, டில்லி வழக்கறிஞர்களுடன், பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்து, மேகதாது திட்டத்துக்கு அனுமதி பெறும் வகையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படியும் வலியுறுத்தவுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
26-ஆக-202118:55:36 IST Report Abuse
VENKATASUBRAMANIAN திமுகவிற்கு இது அரசியல் மட்டுமே.
Rate this:
Cancel
26-ஆக-202108:41:30 IST Report Abuse
அப்புசாமி ஏதோ ஒண்ணு பெருசா நடக்கப்போகுதுன்னு பெரியவர் சொல்லிக்கிட்டே இருக்காரு. காவேரி விஷயத்துல இவுனுக குடுக்குற டார்ச்சர் தாங்காம, நதிகள் தேசியமயமாக்கறோம்னு அறிவிச்சுடப்போறாரு. அதுதான் இப்போதைக்கு பெரிய விஷயம். இதுமாதிரி ஏதாவது செஞ்சாதான் பா.ஜ தமிழ்நாட்டில் கால் ஊனமுடியும். இல்லேன்னா, கல் ஊனிடுவாங்க.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
26-ஆக-202107:56:38 IST Report Abuse
VENKATASUBRAMANIAN திமுக அரசியலுக்கு மட்டுமே காவேரியை உபயோகிப்படுத்தி கொள்ளும் காலம் காலமாக இதுதான் நடக்கிறது. இதை அதிமுகவும் அரசியல் செய்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X