பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வினியோகத்திற்கு 'சேம்பர்' அமைக்கும் பணி தீவிரம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
மடிப்பாக்கம்--மடிப்பாக்கத்தில், நெம்மேலி குடிநீர் திட்டத்தில், தண்ணீர் திறப்புக்கு வசதியாக பிரதான குழாய்களில் 'சேம்பர்'கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில், சதுப்பு நிலத்தை ஒட்டி உள்ள, மடிப்பாக்கத்தின் நிலத்தடி நீர், உவர்ப்பு தன்மை கொண்டது. கிண்டி, கிங் ஆராய்ச்சி மையத்தில், மடிப்பாக்கம், நிலத்தடி நீரை பரிசோதனை செய்த

மடிப்பாக்கம்--மடிப்பாக்கத்தில், நெம்மேலி குடிநீர் திட்டத்தில், தண்ணீர் திறப்புக்கு வசதியாக பிரதான குழாய்களில் 'சேம்பர்'கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில், சதுப்பு நிலத்தை ஒட்டி உள்ள, மடிப்பாக்கத்தின் நிலத்தடி நீர், உவர்ப்பு தன்மை கொண்டது. கிண்டி, கிங் ஆராய்ச்சி மையத்தில், மடிப்பாக்கம், நிலத்தடி நீரை பரிசோதனை செய்த போது, எதற்கும் பயன்படுத்த முடியாமல் மிகவும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.மாநகராட்சியில் இணைந்து, 10 ஆண்டுகளுக்கு மேலானாலும், பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் கொண்டு வரப்படவில்லை. அதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு 50 கோடி ரூபாய் மதிப்பில் மடிப்பாக்கம் 187, 188 ஆகிய வார்டுகளில், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கும் திட்டத்திற்கான, பணிகள் துவக்கப்பட்டன.இரண்டு வார்டுகளிலும், 96 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தற்போது, பிரதான குழாய்களில் தண்ணீர் திறப்பதற்கு வசதியாக, சேம்பர்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு நெம்மேலி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வாயிலாக இந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளதாக வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X