சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மெட்ரோ' நிலையத்தில் செயின் பறித்தவருக்கு 'கம்பி'

Added : ஆக 26, 2021
Share
Advertisement
டி.பி.சத்திரம்,-பச்சையப்பன் கல்லுாரி மெட்ரோ ரயில் நிலையத்தில், மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை, போலீசார் கைது செய்தனர்.பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பக்தவச்சலு, 73; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி கவுசல்யா, 68. கடந்த 10ம் தேதி, பச்சையப்பன் கல்லுாரி மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் சென்றபோது, மர்மநபர் அவரது செயினை பறித்துச்

டி.பி.சத்திரம்,-பச்சையப்பன் கல்லுாரி மெட்ரோ ரயில் நிலையத்தில், மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை, போலீசார் கைது செய்தனர்.பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பக்தவச்சலு, 73; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி கவுசல்யா, 68. கடந்த 10ம் தேதி, பச்சையப்பன் கல்லுாரி மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் சென்றபோது, மர்மநபர் அவரது செயினை பறித்துச் சென்றார்.இது குறித்து பக்தவச்சலு 'ஆன்லைனி'ல் டி.பி.சத்திரம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், ஷெனாய் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 33, என்பவர், செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், 3.5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X