பொது செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த வாகனங்கள் நடைபாதை ஆக்கிரமிப்பு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கோடம்பாக்கம்-கோடம்பாக்கத்தில் நடைபாதையை ஆக்கிரமிக்கும் பழுதடைந்த வாகனங்களால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.சென்னையில் சாலை மற்றும் நடைபாதைகளில், பல நாட்களாக பழுதடைந்த வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்தன. இதை முன்னாள் கமிஷனர்கள் உத்தரவின்படி, மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் இணைந்து அகற்றி வந்தனர்.ஆனால், ஒரு சில இடங்களில், பல மாதங்களாக வாகனங்கள்

கோடம்பாக்கம்-கோடம்பாக்கத்தில் நடைபாதையை ஆக்கிரமிக்கும் பழுதடைந்த வாகனங்களால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.சென்னையில் சாலை மற்றும் நடைபாதைகளில், பல நாட்களாக பழுதடைந்த வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்தன. இதை முன்னாள் கமிஷனர்கள் உத்தரவின்படி, மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் இணைந்து அகற்றி வந்தனர்.ஆனால், ஒரு சில இடங்களில், பல மாதங்களாக வாகனங்கள் அப்புறப்படுத்தப்படாமலே இருக்கின்றன.குறிப்பாக, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் ஐந்தாவது தெருவில், பல நாட்களாக பழுதடைந்த இரண்டு ஆட்டோக்கள் கிடக்கின்றன. தற்போது அந்த தெருவில், சாலை போடும் பணி நடைபெற உள்ளதால், பழுதடைந்த வாகனங்கள் முறையாக அப்புறப்படுத்தாமல், நடைபாதைகளில் துாக்கி போட்டுள்ளனர்.இதனால் நடைபாதை ஆக்கிரமிப்புக்குள்ளாகி, மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X