பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 400 இடங்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை-''சென்னையில், 400 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுவதால், தடுப்பூசி போடாதோர் தாமாக முன்வந்து போட்டுக் கொள்ள வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.சென்னை மாநகராட்சியில், 37 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி, 25 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதில், மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம்

சென்னை-''சென்னையில், 400 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுவதால், தடுப்பூசி போடாதோர் தாமாக முன்வந்து போட்டுக் கொள்ள வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

சென்னை மாநகராட்சியில், 37 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி, 25 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதில், மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணியர், பாலுாட்டும்பெண்கள், காசநோயாளிகள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. அதேபோல், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், முகாம்கள்அமைத்து தடுப்பூசி போடப்படுகிறது.இந்நிலையில், அனைவரும் தடுப்பூசி போட்டு உள்ளதை உறுதிப்படுத்தும்வகையில், வார்டுக்கு, இரண்டு இடங்களில் என, 400 இடங்களில், இன்று தடுப்பூசி போடப்பட உள்ளது.அதன்படி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மருத்துவமனைகள், மினி கிளீனிக்குள், வார்டு அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், பள்ளிகள் என, ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும், 200 தடுப்பூசி சிறப்பு முகாம்கள், ஒவ்வொரு வார்டிலும் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.தடுப்பூசி முகாம்கள் குறித்த விபரங்களை, http://covid19.chennai corporation.gov.in/covid/mega_camp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறியதாவது:தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை, 70 ஆயிரம்'டோஸ்' கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. சென்னையில் வழக்கமாக, 25 - 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இந்த சிறப்பு முகாம்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும்.சென்னையில் தடுப்பூசிபோடாதோர் குறித்த விபரங்கள், களப்பணியாளர்கள் வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவர்கள் தாமாக முன்வந்து, சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். அதிகளவில் தடுப்பூசிகளை அரசு வழங்கும் பட்சத்தில், இதுபோன்று சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X