பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பை பார்த்து பதறாதீர்! வனத்துறை வேண்டுகோள்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை--'பாம்பு, குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களை பார்த்தால், அடித்து கொல்லாமல், எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.சென்னையில் காலி மனைகள், புதர் மண்டிய பகுதிகளில், பாம்புகள் அதிகம் உள்ளன. இவை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பது வழக்கம்.மக்கள், பாம்பை பார்த்தால் உடனே அடித்து விரட்டுவது அல்லது கொல்லும்

சென்னை--'பாம்பு, குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்களை பார்த்தால், அடித்து கொல்லாமல், எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.சென்னையில் காலி மனைகள், புதர் மண்டிய பகுதிகளில், பாம்புகள் அதிகம் உள்ளன. இவை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பது வழக்கம்.மக்கள், பாம்பை பார்த்தால் உடனே அடித்து விரட்டுவது அல்லது கொல்லும் பழக்கத்தை வைத்துள்ளனர். அதுபோல், மழை பெய்தால் வெள்ள பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள, வீடு, வணிக கட்டடங்களில், பாம்புகள் நுழையும். அதுபோன்று பாம்பு, குரங்கு உள்ளிட்ட உயிரினங்களை பார்த்தால், அடித்து விரட்டாமல், உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பாம்புக்கு இடையூறு செய்யாமல், அவை பதுங்கி இருக்கும் இடத்தை கண்காணித்து, பாம்பு பிடிக்க வரும் வனத்துறை ஊழியர்களிடம்தெரிவிக்க வேண்டும்.சென்னை மாவட்டம் மற்றும் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலுார் சுற்றுவட்டார பகுதி மக்கள், 044 - -2220 0335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, சென்னை மாவட்ட வன உயிரின மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X