சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருமகள் மீது தாக்கு மாமனாருக்கு 'காப்பு'

Added : ஆக 26, 2021
Share
Advertisement
அம்பத்துார்,-குடும்ப பிரச்னையால், மருமகளை தாக்கிய மாமனார், கணவரின் தங்கை ஆகியோர் கைதாகினர்.அம்பத்துார் அடுத்த சண்முகபுரம், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். இவரது மனைவி டெய்சி, 36, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து, மாமனார் வீட்டின் ஒரு பகுதியில் வசித்து வந்தார்.இந்நிலையில், இவரை வீட்டை காலி செய்யும்படி, மாமனார் ஜெகன்னாதனும், 71, அவரது மகள்

அம்பத்துார்,-குடும்ப பிரச்னையால், மருமகளை தாக்கிய மாமனார், கணவரின் தங்கை ஆகியோர் கைதாகினர்.அம்பத்துார் அடுத்த சண்முகபுரம், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன். இவரது மனைவி டெய்சி, 36, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து, மாமனார் வீட்டின் ஒரு பகுதியில் வசித்து வந்தார்.இந்நிலையில், இவரை வீட்டை காலி செய்யும்படி, மாமனார் ஜெகன்னாதனும், 71, அவரது மகள் மலர்விழியும், 26, தொல்லை கொடுத்துள்ளனர். நேற்றும் பிரச்னை ஏற்பட்டு, இருவரும் டெய்சியை அடித்துள்ளனர். மேலும் மலர்விழி, காய்கறி வெட்டும் கத்தியால் குத்தியுள்ளார். இதில், டெய்சிக்கு கை மற்றும் கண் இமை அருகே காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின்படி, அம்பத்துார் போலீசார், தந்தை மற்றும் மகளை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X