சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.5 கோடி 'அபேஸ்' மோசடி வக்கீல் கைது

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சென்னை,-முதலீடு செய்த பணத்திற்கு, இரட்டிப்பு தொகை வழங்குவதாக, 1.5 கோடி ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:கோட்டூர்புரம், பாரதி அவென்யூவைச் சேர்ந்தவர்தியாகபிரகாசம், 43; 'ஏஞ்சல் டிரேடிங்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 'ஆன்லைன்' வாயிலாக, பொது மக்கள் முதலீடு

சென்னை,-முதலீடு செய்த பணத்திற்கு, இரட்டிப்பு தொகை வழங்குவதாக, 1.5 கோடி ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:கோட்டூர்புரம், பாரதி அவென்யூவைச் சேர்ந்தவர்தியாகபிரகாசம், 43; 'ஏஞ்சல் டிரேடிங்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 'ஆன்லைன்' வாயிலாக, பொது மக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு, 100 நாட்களில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும்' என,விளம்பரம் செய்து வந்தார்.அதை நம்பி, லட்சக்கணக்கில் முதலீடு செய்தேன். மோசடி செய்துவிட்டார். இவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இதில் தியாக பிரகாசத்தின் சொந்த ஊர் திருச்சி என்பதும், வழக்கறிஞருக்கு படித்துள்ள இவர், பங்கு சந்தை தொழிலில் ஈடுபட்டார்.அதற்காக, தன் நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு, 100 நாட்களில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என, விளம்பரம் செய்து, 30 ஆயிரம் பேரிடம், 1.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.இதையடுத்து, தியாகபிரகாசத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது இதுவரை, 49 பேர் புகார் அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X