வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் பிடிபட்டான்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் பிடிபட்டான்

Added : ஆக 26, 2021
Share
ஏழுகிணறு,--சென்னை, வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. கடந்த 23ம் தேதியன்று ஏழுகிணறு, நார்த்துவால் ரோட்டில் நின்ற போது, மர்ம நபர்கள் மூவர் இவரை மிரட்டி, 1.5 சவரன் செயின், மொபைல்போனை பறித்து தப்பினர்.புகாரின்படி விசாரித்த ஏழுகிணறு போலீசார், இதில் தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 34, மற்றும் 16 வயது சிறுவனை, நேற்று கைது செய்தனர். கடந்த 22ம் தேதி, எஸ்பிளனேடு

ஏழுகிணறு,--சென்னை, வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. கடந்த 23ம் தேதியன்று ஏழுகிணறு, நார்த்துவால் ரோட்டில் நின்ற போது, மர்ம நபர்கள் மூவர் இவரை மிரட்டி, 1.5 சவரன் செயின், மொபைல்போனை பறித்து தப்பினர்.புகாரின்படி விசாரித்த ஏழுகிணறு போலீசார், இதில் தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 34, மற்றும் 16 வயது சிறுவனை, நேற்று கைது செய்தனர். கடந்த 22ம் தேதி, எஸ்பிளனேடு பகுதியில் மூவரும் சேர்ந்து, ஒருவரை மிரட்டி, 21 ஆயிரம் ரூபாய் மற்றும் மொபைல்போனை பறித்தது விசாரணையில் தெரிந்தது.அவர்களிடம் இருந்த மொபைல்போனை பறிமுதல் செய்து, தலைமறைவான வினோத் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X