தமிழ்நாடு

கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கங்கள் புத்துயிர் பெறுமா?

Added : ஆக 26, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கங்களில் 100 பணியாளர்கள் 6 ஆண்டாக சம்பளம் இன்றி பணியாற்றும் பரிதாப நிலையில் உள்ளனர். அலுவலக மின் இணைப்பு துண்டிப்பால் இருளில் தவிக்கின்றனர். சங்கத்திற்கு நிதி உதவி அளித்து புத்துயிர் பெறச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநில கூட்டுறவு வீட்டு வசதி இணையம் வீட்டு வசதி சங்கங்களுக்கு குறிப்பிட்ட சதவீத

தேனி : தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கங்களில் 100 பணியாளர்கள் 6 ஆண்டாக சம்பளம் இன்றி பணியாற்றும் பரிதாப நிலையில் உள்ளனர். அலுவலக மின் இணைப்பு துண்டிப்பால் இருளில் தவிக்கின்றனர். சங்கத்திற்கு நிதி உதவி அளித்து புத்துயிர் பெறச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில கூட்டுறவு வீட்டு வசதி இணையம் வீட்டு வசதி சங்கங்களுக்கு குறிப்பிட்ட சதவீத வட்டியில் பொதுமக்கள் வீடு கட்ட கடன் வழங்கியது. அதனை வாங்கிய சங்கம் ஒரு சதவீத வட்டி உயர்வில் பொதுமக்களுக்கு கடன் வழங்கி தவணை முறையில் வசூலித்தது. இச்சங்கங்களில் தலைவர்கள், தனி அலுவலர்கள், கூடுதல் பணியாளர்கள் நியமித்து தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்கினர் .

தற்போது கடனை வசூலிக்க முடியாமல் சங்கங்கள் முடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் 24 கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கங்களில் 250 பணியாளர்கள் இருந்தனர்.ஒவ்வொரு சங்கங்களிலும் தலா ரூ. 3 கோடி முதல் ரூ.5 கோடிவரை பாக்கி நிலுவை உள்ளது. கடன் பெற்றவர்கள் அரசு தள்ளுபடி வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் திருப்பிச்செலுத்தாமல் இழுத்தடிக்கின்றனர். சங்க நிதி நிலைமை நலிவால் சம்பளம் வழங்க முடியவில்லை. 2019ல் கூடுதல் பணியாளர்களை 150 பேரை ரேஷன் கடைகளுக்கு மாற்றம் செய்தனர். 50 வயதை தாண்டிய 100 பேர் இச்சங்கங்களில் பணியாற்றுகின்றனர்.

சங்கத்திற்கு 2 , 3 பேர் பணியில் உள்ளனர். நிதி நெருக்கடியால் இவர்கள் 6 ஆண்டுகளாக சம்பளம் பெற வழியில்லை. என்றாவது ஒருநாள் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அலுவலகம் வருகின்றனர். கடன் வசூலிக்க செல்ல கூட வழியின்றி உள்ளனர். மின் இணைப்பு துண்டிப்பு சங்கங்களுக்கு மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்புகள் துண்டித்து ஒரு ஆண்டுக்கு மேலாக இருளில் தவிக்கிறது.

பல கட்டடங்களுக்கு வாடகை செலுத்தாததால் உரிமையாளர்கள் காலி செய்ய கூறி வெளியே தள்ளுகின்றனர். பிரச்னை தீரும் என்ற நம்பிக்கையில் பணியாளர்கள் நாட்களை கடத்துகின்றனர். சிலர் விடுப்பு எடுத்து கூலி வேலைக்கு செல்கின்றனர். எனவே கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு நிதி உதவி அளித்து மீண்டும் புத்துயிர் பெற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X