பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி நிலங்களில் விதைப்புக்கு தயக்கம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் தொடர் மழை பெய்யாததால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் விதைப்புக்கு தயக்கம் காட்டுகின்றனர்.ஆண்டிபட்டி சுற்றுப்பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாத தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் நிலங்களை உழவு செய்து விதைப்பு பணிகளை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் தொடர் மழை பெய்யாததால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் விதைப்புக்கு தயக்கம் காட்டுகின்றனர்.

ஆண்டிபட்டி சுற்றுப்பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாத தென்மேற்கு பருவமழையை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் நிலங்களை உழவு செய்து விதைப்பு பணிகளை துவக்குவர். ஏற்கனவே பெய்த மழையில் நிலங்களை உழவு செய்து உரமிட்டு வைத்துள்ளனர்.

இந்நிலையில் விதைப்புக்கான மழை இன்னும் இல்லை. சில நாட்களுக்கு முன் மழை பெய்தாலும் தொடர் மழை இல்லாததால் விதைப்பு பணிகளை இன்னும் துவக்கவில்லை. நிலத்தில் அதிக ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விதைப்புக்கு சாதகமாக இருக்கும். இதனால் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X